போட்டி 7 # 11 - மூத்தகுடி

69 12 16
                                    


மூத்தகுடி. முதற்குடியாம் தமிழினத்தின் அடையாளம்.
ஆண்டு பல நூற்றாண்டு தாண்டி நிற்கும் தன்மானம்.

ஏறுதழுவுவல் ஏற்றம் கொண்ட எம் இனத்தின் வீரமடா.
வீட்டிலொரு பிள்ளையாக காளையதை வளர்ப்போமடா...

நாங்கள் பசியோடு படுத்தாலும்
எம் காளை புசிக்க வழிசெய்வோம்.
மனித மிருக எல்லை தாண்டி
புதியதோர் விதிசெய்வோம்...

வருடந்தோரும் காத்திருக்கும் நேரமதை எதிர்பார்த்து.
வீரமிருந்தால் நின்னு பாரு எம் காளையை எதிர்த்து..

அன்பால் கட்டி வைத்த கயிற்றை அவிழ்க்கும் நேரமின்று.
வாடிவாசல் வழியாக திமில் கொண்ட காளையொன்று..

திமிர் கொண்ட தமிழ் மாந்தரை நோக்கிச் சீறிப் பாயும்.
வீரம் கொண்ட ஆடவரையும் அது முட்டி வீசும்..

எட்டு திக்கும் துதிபாடும் எங்கள் வீரம்.
கட்டியணைத்துக் காளைகளோடு கொஞ்சிப் பேசும்

பணம் பார்க்க எம் இனம் அழிக்கத் துணிந்தாயே...!
வரலாறு வியக்கும் எங்கள் வீரத்தை நீ மறந்தாயோ..?

மதச் சாயம் பூசுவதே உன் ஈன புத்தி.
அதையறிந்து கொண்டு செயல்படுவது தான் எங்கள் யுக்தி.

சிந்துவெளி சான்று கூறும் எங்கள் பண்பாடு..
சில்லரைக்காக ஏன் போடுகிறாய் நீ கூப்பாடு.?

மானம் காக்க மரணிக்கும் மாந்தர் வாழும் பூமியது.
உயிர்பிச்சை போடுகிறோம் நீ ஓடிவிடு.



***********

Contest EntriesWhere stories live. Discover now