போட்டி 12 # 4 சிகப்பு மாலை

39 7 3
                                    

எங்குப் பார்த்தாலும் கண்ணை கவரும் பசுமை. பூமி முழுவதையும் பச்சை வண்ண பட்டு ஆடையில் அழங்கரித்ததுப் போல் அந்த இடம் காட்சி அளித்தது.

               அந்த இடம் அடர்ந்த காற்று கூட நுழைய முடியாத காடும் அல்லாமல், மலை சார்ந்த இடமும் அல்லாமல் இவ்விரண்டிற்கும் நடுவில் இருந்தது. அங்கு வாழும் மக்கள் வழிப்பறி செய்து அதில் வரும் செல்வதை வைத்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.

               அந்த நிலத்தை இராஜபாகு தலைவனாக இருந்து அந்த மக்களை ஆண்டு கொன்டு வந்து இருந்தான். அவர்கள் தொழில் வழிப்பறியாக இருந்தாலும் அதனை கொள்கையோடு செய்து வந்தனர்.

                முதியோரிடம், ஊனம் முற்றவரிடம், பெண்களிடம் வழிப்பறி செய்தல் குற்றம்.

                 வறுமையில் வாழ்பவர்களிடம் வழிப்பறி செய்வது குற்றம்.

                 மக்களை ஏமாற்றி செல்வம் சேர்த்து வைத்துள்ள அரகர்களிடமும், பிறர் மீது இரக்கம் காட்டாத மிருகங்களிடமும் மட்டும் வழிப்பறி செய்ய வேண்டும் என்று ஒரு வழி முறை கொண்டு வாழ்ந்து வந்தனர்..

                  இராஜபாகுவிற்கு தாரிக்கா என்ற அழகிய மகள் இருந்தாள். பார்ப்பவர்கள் வியந்து மயங்கும் அளவிற்கு அழகு நிறைந்த பதுமை அவள். பெண்களும் அவளை பார்த்து சொக்கி போவார்கள். அழகு மட்டும் அல்ல அவள் வீரமும் குணமும் நிறைந்த பெண்மணி ஆவாள்..

                  அது ஒரு அழகிய வேனில் காலமாகும். அன்று அவர்கள் ஊரில் வருடம் வருடம் துர்க்கை அம்மனுக்கு விழா நடத்துவது வழக்கம். அந்த நண்பகலில் புறா வானத்தில் வட்டமிட்டு பறக்க,  குரா, மரா, பாதிரி பூக்கள் நிலத்தில் பூத்து குலுங்க, துர்க்கை அம்மனை சுற்றி மக்கள் பாலை யாழலும், பாலைப் பண்ணாலும் இசை அமைத்து ஆட, அதனைக் கண்டு இராஜபாகும் அவன் மகளும் இன்பமாய் இருந்தனர்..

                  அது ஒரு பெரிய விழா என்பதால், அருகில் இருந்த நிலத்தில் இருந்த  வழிப்பரிப்பவர்களும் அன்று அங்கு கூடி இருந்தனர். அனைவருக்கும் போதிய அளவிற்கு உண்ண வழிப்பறி செய்த யானை மாடுகளை உணவாக சமைத்து ஏற்ப்பாடுகளும் செய்யப் பட்டிருந்தது. இவ்வாறாக விழா கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.

                 அப்பொழுது தாரிக்கா தன் காதலனும், தாய் மாமனுமான இந்திரஜித்தின் பிரிவை எண்ணி பாலைப் பண்ணில் அழகிய காணத்தில் பாட அங்கு இருந்த அனைவரும் அந்த இசை மலையில் மயங்கி நின்று கொண்டிருந்தன.

                  தெற்கு திசையில் வழிப்பறி செய்ய சென்ற இருந்த இந்திரஜித் வெற்றி வாகையை சூடிக் கொண்டு வந்துக் கொண்டிருந்தான். அதனைப் பார்த்த தாரிக்காவும் தனது சோகக் காணத்தை தன் மணாலனைப் பார்த்த இன்ப வெள்ளத்தில்  இன்பத் துயிலாக மாற்றினாள். அதனைக் கேட்டு அனைவரும் இன்பம் மழையில் ஆடினர்.

                 அவர்கள் இன்பம் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பக்கத்து நிலத்தில் இருந்த காங்கேயன் படைகளை திரட்டி தாரிக்காவையும், அவள் நிலத்தையும் அடைய வந்தான். அவர்கள் எதிர்ப்பாரத நிலையில் வந்ததால் அவர்கள் நிலை தடுமாறினார்கள்.

                   இந்திரஜித் முதுகினில் வஞ்சகத்தால் குத்தப் பட்டு மாய்ந்து மடிந்தான். பிறகு காங்கேயன் தாரிக்காவை அடைய நெருங்கினான். தாரிக்கா இதற்க்கு மேலும் அவர்களை வெல்ல முடியாது என்று முடிவு செய்து காங்கேயனைப் பார்த்து “ இதற்க்கு உன்னை பலி வாங்குவேன்” என்று கூறி துர்கை அம்மன் முன் இருந்த தீ குண்டத்தில் குதித்து தன் உயிரை மாய்த்து கொண்டாள்..

                   அந்த மக்களின் அழு குரலிலான சங்கு ஒலியின் இடையில், இந்திரஜித் வெற்றி வாகை, காங்கயேன் கழுத்தில் வந்து அடைந்தது.

                   meenaaa93
                   

Contest EntriesWhere stories live. Discover now