போட்டி#3. 7 - நினைவால் இழந்த நிஜம்

91 12 5
                                    


அது ஒரு கண்டய்ன்மெண்ட் அறை. சுற்றுச் சுவரில் திரவங்கள் பூசப்பட்டு, அலுமினியம் டைட்டானியம் என்று ஆறு அடுக்குகளில் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. "கண்ட்ரோலிங் பிட்ச்" என்று அதற்கு இன்னொரு பெயரும் உண்டு. உள்ளே சென்றுவிட்டாள் மனிதன் கூட அந்த அறை சொல்கிறபடி தான் நடந்து கொள்ள வேண்டும். "என் பொண்டாட்டி கூட பரவால்லனு தோணவைச்சிருச்சு." என்று கிண்டல் செய்யவும் செய்தனர்.



அந்த கட்டுமானத்தில் அதிக செலவில் கட்டப்பட்ட ஒரே அறை அது தான். அதே போல் அந்த அறிவியல் தொழிற்கூடத்தில் பல முறை உபயோகிக்கப் பட்ட அறையும் அதுவாகத் தான் இருக்க முடியும்.



அன்று அந்த அறையின் விளக்குகள் சிவப்பு நிறத்தில் சுற்றிக் கொண்டு இருந்தது. டேஞ்சர் ஏரியா என்று சுட்டிக் காண்பிக்க அலாரத்தின் ஒளி வேறு காதை அறுத்துக் கொண்டிருந்தது. அந்த அறையுடன் இணைக்கப்பட்டிருந்த கன்ட்ரோல் ரூமில், வெள்ளைக் கோட்டும், மூக்குக் கண்ணாடியும் அணிந்த நடுத்தர வயதுள்ள மூன்று பேர் கணினியில் விரைவாக விசைப்பலகையை அழுத்திக் கொண்டிருந்தனர்.



"என்ன நடந்தது?" பரபரப்பாக விசாரித்துக் கொண்டு, கவலை தோய்ந்த முகத்துடன், ஒரு இளைஞன் அந்த கன்ட்ரோல் அறைக்குள்ளே நுழைந்தான்.



"ரகு, CEp4708 அன்ஸ்டேபிள் ஆகிடுச்சு. கண்டய்ன்மெண்ட்சாம்பர் எவ்ளோ நேரம் தங்கும்னு தெரில." அந்த மூன்று பேர்ல் ஒருவர் பரபரப்புடன் கூற, ரகுவிற்கு என்ன பிரச்சனை என்று தெரிந்துகொள்ள ஒரு நொடி கூட பிடிக்கவில்லை.



"எப்ப ஆரம்பிச்சுது?" மொட்டையாக கேட்டாலும், வேறொருவர் அதற்கு பதிலளித்தார்.



"பதிமூன்று நிமிடம், இருபது நொடிகள்." வேகமாக அவன் கை கடிகாரத்தை 13:20 என்று டைமர் மோடிற்கு மாற்றி அமைத்துக் கொண்டான்.



"வெப்ப நிலை (Temperature), இரசாயனக் கலவை (Chemical detergents), வளிமண்டல அழுத்தம் (atmospheric pressure) இன்னும் நாம் சோதனை செய்த அனைத்துக் காரணிகளையும் ஒன்று விடாமல் மாற்றம் செய்து பாருங்கள். நான் இதோ வருகிறேன்," என்று ஆணை பிறப்பித்து விட்டு விடுவிடுவென அவனது தனியறைக்குச் சென்றான்.

Contest EntriesWhere stories live. Discover now