போட்டி#3. 10 - சோதனைப் பிராணி

63 11 7
                                    


"டூ............ டூ..........டூ..... டூ டூ டூ........." என்று இடைவிடாது ஒலித்த இதயமாணியின் ஓசை கேட்டு திடுக்கிட்டு தன் ஐந்து நிமிட உறக்கத்தில் இருந்து விழித்தான் அர்ஜுன்.

விழியில் ஒட்டியிருந்த தன் கனவுத் தடையங்களை தலையசைத்து களைத்துவிட்டு அந்த இதயமாணியை நோக்கினான்.அதில் இருந்ததை கண்டவுடன் அவனது கண்கள் ஒளிபெற்று மிளிர்ந்தது, இதழின் ஓரம் வெற்றிப் புன்னகையை உதிரச் செய்தது அக்காட்சி.

"பிராசசிங் ஸ்டார்டட்" என்ற வார்த்தைகள் தான் அவை.

அர்ஜுன் அந்த இதயமாணியோடு இணைக்கப் பட்டிருந்த கண்ணாடி பெட்டியினுள் இருந்த பூனையை பார்த்தான். தனக்குள் என்ன நடக்கிறது என்பது பற்றி சிறிதும் அறியாத அப்பூனை அவனை தன் கெஞ்சல் பார்வையால் உற்று நோக்க அதை எதிர்கொள்ள முடியாதவனாய் தவித்தான் அர்ஜுன்.

அப்பூனையின் விழிகளில் இருந்து தன் விழிகளை விலக்கி அதை இதயமாணியின் திரை மேல் செலுத்தினான். இருபது நாட்களுக்கு முன் தான் இவ்வாறு ஒரு உயிரை துன்புறுத்த போகின்றோம் என்று எள்ளளவும் எண்ணவில்லை 
அவன்.

ஆனால் விதியின் விளையாட்டை யாரால் தடுக்க இயலும்!! எதிர் பாராத நேரங்களில் திருப்புமுனைகளை தருவது தானே அதன் இயற்கை!!

அந்த பூனையின் இதய அலைகள் முன்னோக்கி ஓடிக்கொண்டிருக்க அர்ஜுனின் எண்ண அலைகளோ இரண்டு வருடம் பின்னோக்கி ஓடிக் கொண்டிருந்தது.

கவிதா!! அர்ஜுனின் மனைவி மற்றும் கல்லூரிக் காதலி. இருவரும் ஒரே கல்லூரியில் தான் பயோ கெமிஸ்டிரி துறையில் பயின்றனர்.

இவர்களது காதல் திருமணம் பெற்றோர் ஆசியுடன் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் கழித்து ஓர் அழகிய பெண் குழந்தைக்கு பெற்றோர் ஆனார்கள்.

இவ்வாறு அன்பு நிறைந்த அக்குடும்பத்தில் அப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்படுமென யாரும் எதிர் பார்க்க வில்லை.

கவிதா 'லூகிமியா' என்னும் இரத்த புற்று நோயால் திடீர் மரணம் அடைந்தாள்.

Contest EntriesWhere stories live. Discover now