போட்டி 6 # 13 - புட்டன் புட்டி

78 10 6
                                    

ஒரு ஊருள புட்டன் புட்டினு இரண்டு பேர் இருந்தார்கள். அவர்களுக்கு ஊரில் உள்ள அனைவரும் இனைந்து திருமணம் செய்து வைத்தார்கள்.

"புட்டி நான் வயலுக்கு வேலைக்கு செல்கிறேன். நீ எனக்கு மதியா உணவு கொண்டு வா." என்று கூறிவிட்டு புட்டன் வேலைக்கு சென்றான். மதிய உணவை தயார் செய்து புட்டி எடுத்துக்கொண்டு சென்றாள். புட்டன் தூரத்தில் வயலில் வேலை செய்து கொண்டு இருந்தான்.

"புட்டா சோரு கொண்டு வந்து இருக்கேன் வா புட்டா" என்று புட்டி கத்தினால். அதை கேட்டதும் வயலில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் சிரித்தார்கள். அதை புட்டனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

"புட்டி என்னை புட்டன் என்று அழைக்காதே " என்று புட்டன் கூறினான்.

"உன் பெயர் புட்டன் தானே நான் உன்னை புட்டன் என்று தான் அழைப்பேன்" என்று புட்டி கூறினால். அதை கேட்டதும் புட்டனுக்கு கோபம் வந்தது.

"புட்டி என்னை மீண்டும் நீ புட்டன் என்று அழைத்தாள் நான் உன்னை கொன்று புதைத்துவிடுவேண்." என்று புட்டன் கூறினான்.

"நான் அப்படித்தான் அழைப்பேன் புட்டா, புட்டா, புட்டா." என்று புட்டி புட்டனை சீண்டினாள். கோபம் கொண்ட புட்டன். அவளை கொன்று புதைத்தான்.

அவளை புதைத்த இடத்தில் புல் முளைத்து அந்த புல்லை மாடு ஒன்று மேய்ந்தது. அந்த நேரத்தில் புட்டன் அந்த பக்கம் வந்தான். அப்போது மாடு.

"மா மா புட்டா, மா மா புட்டா." என்று கத்தியது. அதை கேட்டதும் புட்டன் உச்சம் தலையில் இருந்து உள்ளங்காள் வரை கோபத்தில் பற்றி எரிந்தான்.

"ஏய் மாடே இனி அவ்வாறு கத்தினால் உன்னை வெட்டி கொன்று உன் தோளில் செருப்பு செய்துக்கொள்ளவேன்." என்று புட்டன் மாட்டை மிரட்டினான். அசராத மாடு திரும்பவும்" மா மா புட்டா, மா மா புட்டா." என்று கத்தியது. உடனே புட்டன் அந்த மாட்டை கொன்றுவிட்டு அதன் தோளில் செருப்பு செய்துக்கொண்டான். அந்த செருப்பை போட்டுக்கொண்டு அவன் தெருவில் நடந்து சென்றான். அப்பொது அந்த செருப்பு நடக்க நடக்க.

"சரக் சரக் புட்டா, சரக் சரக் புட்டா." என்று கூறியது. அதை கேட்டது மீண்டும் புட்டனுக்கு கோபம் வந்தது.

"ஏய் செருப்பே என்னை அவ்வாரு அழைத்தாள் உன்னை பிச்சி எறிந்துவிடுவேன்." என்று புட்டன் கூறினான். ஆனால் அந்த செருப்பு அவனை மதிக்கவில்லை. மீண்டும் "சரக் சரக் புட்டா சரக் சரக் புட்டா" என்று கூறியது. கோபத்தில் புட்டன் அந்த செருப்பை துண்டு துண்டாக வெட்டி எறிந்தான்.

அந்த பக்கமாக வந்த சேவல் ஒன்று அந்த செருப்பை கொத்தி திண்றது. பின் அடுத்த நாள் விடியர் காலை சேவல் புட்டன் வீட்டின் மேல் இருந்து கூவியது.

"கொக்கரக்கோ புட்டா கொக்கரக்கோ புட்டா." என்று சேவல் கூவியது. அதை கேட்டதும் கோபத்தில் புட்டன் எழுந்து வெளியே வந்தான்.

"ஏய் சேவலே அவ்வாறு கூவினால் உன்னை அறுத்து கொழம்பு வைத்து சாப்பிட்டுவிடுவேன்." என்று எச்சரித்தான். அதையும் மீறி அந்த சேவல் கூவியது. "கொக்கரக்கோ புட்டா கொக்கரக்கோ புட்டா." என்று சேவல் கூவியது. கோபத்தில் சேவலை வெட்டி கொழம்பு வைத்தான் புட்டன். கொழம்பு கொதிக்க துடங்கியது. அப்போது கொழம்பு.

"கொதக் கொதக் புட்டா, கொதக் கொத்க புட்டா." என்று கொதித்தது. அதை கேட்டதும் கோபம் புட்டனுக்கு தலைக்கேறியது.

"ஏய் கொழம்பே அவ்வாறு என்னை அழைத்தாள் உன்னை குடித்துவிடுவேன்." என்று புட்டன் மிரட்டினான். மீண்டும் கொழம்பு "கொதக் கொதக் புட்டா, கொதக் கொத்க புட்டா."என்று கொதித்தது. கோபம் தலைக்கு ஏறிய புட்டன். கொதிக்கும் கொழம்பை எடுத்து குடித்தான். சற்று நேரத்திற்கு பின் வயிற்றக்குள் சென்ற அந்த கொழம்பு.

"பொதக் பொதக் புட்டா,  பொதக் பொதக் புட்டா." என்று கத்தியது. அதை கேட்டதும் மீண்டும் புட்டன் கோபம் கொண்டான்.

"ஏய் வயிரே அவ்வாறு சத்தமிட்டால் உன்னை அருத்துவிடுவேன்." என்று மிரட்டினான். ஆனால் அவன் வயிறு மீண்டும் சத்தமிட்டது. "பொதக் பொதக் புட்டா,  பொதக் பொதக் புட்டா." தலைக்கு ஏறிய கோபத்தில் தன்னை தானே அறுத்துக்கொண்டான் புட்டன்.

"தவறு செய்யாத மனிதன் இல்லை, ஆனால் முட்டாள்கள் அதை பிடித்துக்கொண்டு இருப்பார்கள்"







Contest EntriesWhere stories live. Discover now