போட்டி #10 - 6. கேட்காமல் கிடைத்த வரம்

57 3 1
                                    

டிசம்பர் 1,2016

வீடே விழாக்கோலமாக இருந்தது விருந்தினர் வருகையால் அதித்தியின் பதினெட்டாவது பிறந்த நாளை கொஞ்சம் சிறப்பாகவே கொண்டாடினர்.
காலையில் கோயில் சென்று அர்ச்சனை செய்தும், முதியோர் இல்லம் சென்று அங்கு மதிய உணவை முடித்தும்.

தற்போது எல்லாரும் அதித்தியை கோயில் திருவிழாவில் அம்மனை தரிசிக்க சூழ்ந்திருப்பது போல் சுற்றி இருந்தனர், பிறந்த நாள் கேக் வெட்டுவதற்கு.

அதித்தி வழக்கம் போல் அவளின் அன்புத் தம்பி வித்யுத்க்கு ஊட்டிவிட்டாள். அம்மாவுக்கு தான் எல்லாரும் முதல்ல ஊட்டுவாங்க என்று பக்கத்து வீட்டார் கேட்க.. அதற்கு அதித்தியின் அம்மா லதா சாமர்த்தியமாக பதில் அளித்தார்.

"அம்மா பிள்ளைகளுக்கு தான் முதல்ல ஊட்டுவாங்க அதத்தான் என் பொன்னும் பன்னிருக்கா..."
என்று இருவரையும் கட்டி அணைத்தார்.எல்லாம் நன்றாக முடிந்தது.

மாமா பேச்சை ஆரம்பித்தார்.....

"பாருங்கள் பிள்ளைகள் இரண்டும் பெருசா வளந்திருச்சுங்க..."என்று கூறி வித்யுத்தின் முதுகில் செல்லமாக அடித்தார்.

"ஆமா நீங்க ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்குறிங்கள.... மருமகளையும் மருமகனையும் பார்க்க மதுரை பக்கம் வந்தால் தான .....
" கப் அன்ட் ஸாஸரை கையில் ஏந்திக் கொண்டு கேட்டார் அதித்தியின் தந்தை.

"நாங்க மட்டுமா வளர்ந்திருக்கோம் நீங்களும் தான் அகலமா வளந்துடிங்க " என்று கிசுகிசுத்துக் கொண்டே அதித்தி அருகில் வந்தமர்ந்தான் வித்யுத்.

"டேய் ஏழரைய கூட்டாதடா பெரியவங்கள அப்படி பேச கூடாது " என்று அவன் காதில் அவள் ஓத.

அதைக் கவனித்த மாமா என்னமா உன் தம்பி சொல்றான் என்று கேட்க ...அதித்தி அவனை ஓரக் கண்ணால் பார்க்க...

"ஒன்னும் இல்லை மாமா சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்.."எங்க ஒலரிருவாளோனு அவன் முந்திக் கொண்டான்.

"ஹாஹா தமாசான பையன் ....எங்கப்பா நேரம் இருக்கு,வேலை வீடுனு சரியா போயிடுது .... நீங்கள் எல்லாரும் டில்லி வந்து கொஞ்ச நாள் தங்களாம்ல ...."என்று அதித்தியின் அப்பாவை பார்த்துக் கூறினார்.

Contest EntriesWhere stories live. Discover now