போட்டி#3. 11 - மரணத்தின் பின்னால்

58 11 6
                                    


காடு மேடெல்லாம் கட்டிடங்களாய்ப் போக உலகமே எந்திர மயமாகி போட்டியாளர்களால் சூழ்ந்து நிற்கும் இந்த நிலையில்.

வளரும் நாடுகளும் வல்லரசு நாடுகளும் எதிர்காலம் பற்றிய ஆராய்ச்சியை முடுக்கி விட்டுள்ள காலகட்டம்.

ஒவ்வொரு தேசமும் ஏதோ ஓர் துறையில் புதிதோர் கண்டுபிடிப்பை நிகழ்த்தி தம் நாட்டின் பெருமையையும், வலிமையையும் உலகுக்கு உணர்த்தும் முனைப்போடு இருந்தன.

வல்லரசு நாடுகள் பல வளர்ந்து வரும் தேசங்களில் உள்ள மக்களின் உடல் மற்றும் மன வளர்ச்சியைப் பாதிக்கும் வகையிலான பொருட்களை உணவு, மருந்து மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை மக்களிடம் சந்தைப் படுத்தி அதன் மூலம் வளர்ந்து வரும் நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கும் வேலையை செய்து கொண்டிருந்தன.

அதுபோன்ற தாக்குதல்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதுடன் தம் நாட்டு மக்களின் வாழ்நாளை நீட்டிக்கவும் முடிந்த வரை மரணத்தை வெல்லும் கண்டுபிடிப்பை நிகழ்த்தும் ஆராய்ச்சியில் தம் சொந்த நாட்டிற்காக ஏழு பேர் கொண்ட குழுவில் ஒருவனாய் ஜீவானந்தம் பணியாற்றிக் கொண்டிந்தான்

ஜீவானந்தம், தன் சிறுவயதிலேயே தாய் இறந்து போக தந்தை மறுமணம் செய்து கொண்டு ஜீவாவை ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டு விட்டு சென்றுவிட்டார்.

அன்றிலிருந்து தனிமையும், மனதில் வெறுமையும் குடியேறி சோகமே உருவாய் வாழ்ந்து கொண்டிருந்தான்

ஆனால் என்னவோ படிப்பில் மட்டும் ஆர்வம் கொண்டிருந்தவன் பின்னால் மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சியாளனாக நாற்பது வயதைக் கடந்து இரு குழந்தைகளுக்கு தகப்பனாகியிருந்தான்.

தற்போது, மரணத்தை வெல்லும் அல்லது தள்ளிப் போடும் வகையிலான மருந்தைக் கண்டுபிடிப்பதே அவன் சார்ந்த அந்த ஏழு பேர் கொண்ட குழுவின் வேலை. ஆனால் ஜீவாவிற்க்கு அதையும் தாண்டியொரு படி மேலே சென்று "மரணத்தின் பின்னால்" என்ன நடக்கிறது என்பதை ஆராய்வதைத் தம் வாழ்நாள் இலட்சியமாக வைத்திருந்தான்.

Contest EntriesWhere stories live. Discover now