இணை பிரியாத நிலை பெறவே-2

6.5K 201 29
                                    

குருஜி சேகருக்கு அழைத்து தம்பதியாக தன்னை காண வரும்படி கூறினார்.

குருஜி :இங்க பாருங்க நான் அவங்க கிட்ட பேசிட்டு நல்ல தகவலா சொல்றேன் நீங்க கவலை படாம போங்க.

பிறகு இருவரும் விடை பெற்று சென்றனர்

குருஜியை காண சேகர் சுப்ரதா தம்பதியினர் வந்தனர்

குருஜி :இங்க பாருங்க நம்ம சீதாக்கு நல்ல சம்மந்தம் வந்துருக்கு இந்த பையனோட ஜாதகமும் நம்ம சீதா ஜாதகமும் ஒத்து போகுது.  எனக்கு தெரியும் அவ விருப்பதுக்காக மட்டும் இல்லை அவ ஜாதகத்துல இருக்குற பிரச்சனையால தான் இத்தனை நாள் கல்யாணத்தை தள்ளி போட்டீங்கன்னு சீதாவோட நல்ல மனசுக்குத்தான் அவளுக்கு நல்ல இடம் அமைய போகுது. பையன் பெரிய இடம் பல ஆயிரம் கோடி சொத்து உண்டு. நல்ல குடும்பம் வர தட்சணையும் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க. இனி நீங்கதான் சொல்லணும் நீங்க சொன்னா சாயங்காலமே பொண்ணு பாக்க வந்துடுவாங்க என்ன சொல்றிங்க

சேகர் :சாமி நீங்க பெரிய இடம்னு சொல்றிங்க அதான் பயமா இருக்கு.பணம் இருக்கேனு கட்டி தர முடியாது பையன் எப்படி. எம்பொண்ணு சத்தம் போட்டு கூட நான் பேசுனது இல்ல அவ பூ மாதிரி அவளை கட்டிக்க போறவனும் அவளை நல்லா பாத்துக்கணும் பணம் முக்கியம் இல்லை

குருஜி :இதோ பாரு சேகர் சீதா நான் பார்த்து வளந்த பொண்ணு எனக்கு பேத்தி மாதிரி. பணம் இருக்குன்றத்துக்காக நான் யாருக்கோ கட்டி தர சொல்ல மாட்டேன். பையன் தங்கமான பையன் ஒரு கெட்ட பழக்கம் கூட இல்லை. தப்பான சவகாசம் கூட இல்ல. ஜஃபர்  குரூப்சை இந்த வயசுலேயே லாபகரமா நடத்துற சாமர்த்தியமான புள்ள அதனால நீ தைரியமா பொண்ணை குடுக்கலாம்.அதோட ஒரு முக்கியமான விஷயம்.  இவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் ஆகலேனா யாராவது ஒருத்தர் உசுருக்கு ஆபத்து வரும். அதே இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சீங்கன்னா நூறு வருஷம் நல்லா இருப்பாங்க.

இதை கேட்டு அதிர்ந்த சேகர் சுப்ரதா தம்பதியினர் சிறிது நேரம் மௌனம் காத்தனர் பின் சேகர் பேசினர்

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now