இணை பிரியாத நிலை பெறவே -4

5.8K 211 47
                                    

சீதா நாளைக்கு திருமணம் என்ற எண்ணத்தில் உறக்கம் இன்றி அமர்ந்திருந்தாள் அவளை கவனித்த சேகர் அவள் அருகே வந்தார்.

சேகர் :என்ன மா தூங்கலியா நாளைக்கு கல்யாணம் இல்ல சீக்கிரம் எழுந்திருக்கணும் இல்ல

சீதா :ஏம்ப்பா பொண்ணுங்களுக்கு மட்டும் கல்யாணம் நாங்க மட்டும் ஏன் எங்க குடும்பத்தை விட்டுட்டு இன்னோரு குடும்பத்துக்கு போணும். எனக்கு பயமா இருக்கு பா அங்க எப்படி இருப்பேன் எல்லாத்தையும் எப்படி சமாளிப்பேன். எனக்கு எதுவுமே புரியல.

சேகர் :எனக்கு மட்டும் ஆசையா உன்ன அனுப்பணும்னு ஆனா இது பெத்தவனா என்னோட கடமை மா. கல்யாணம் ஆகி உன்னோட அம்மாவை வீட்டுக்கு கூட்டிட்டு வர்றப்போ அப்படி அழுதா எனக்கு அப்போ பெருசா தெரியல ஆனா எம்பொண்ணை இன்னொருத்தருக்கு தரணும் நினைக்கிறப்போ தான் முடியல (என்று கண் கலங்கினார் )

சீதாவை தேற்ற வந்தவரை இப்போ சீதா தேற்றி கொண்டிருந்தாள். அப்போது அங்கே சுப்ரதா வந்தார்.

சுப்ரதா :என்ன அப்பாவும் பொண்ணும் அழுற போட்டியில் கலந்துக்க போறிங்களா

சீதா :ஆமா நீங்க மட்டும் உங்க கல்யாணத்தபோ அழலியா

சுப்ரதா :நான் அழுதேன் தான் ஏன்னா உங்க அப்பா அப்போ அப்டி

சீதா :எங்க அப்பாக்கு என்ன அவர் எப்போவும் நல்ல அப்பா

சுப்ரதா :ஆமா உன்னோட அப்பா சுத்த தங்கம்தான் ஆனா கல்யாணம் ஆனப்போ எப்படி இருந்தாருன்னு கேளு

சீதா :அம்மா என்ன சொல்ராங்க

சேகர் :கல்யாணம் ஆன புதுசுல எனக்கு குடிக்கிற பழக்கம் இருந்திச்சு அப்புறம் சமபாதிக்கிற பணம் பாதிதான் அம்மாகிட்ட குடுப்பேன் சில சமயம் இதனால சண்டை கூட வரும்.

சேகர் சொல்ல சொல்ல சீதா கேட்டுக்கொண்டிருந்தாள்.

சீதா :ஆனா நீங்க குடிச்சு நான் பார்த்ததில்லையே

சேகர் :அதுக்கு காரணம் நீதான்

சீதா :நான் பாட்டுக்கு ஊதாரித்தனம்மா இருந்தேன் அப்போதான் நீ பொறந்த அப்பான்னு கூப்பிட்ட.நீ முதன் முதலில் நின்னது என்ன பிடிச்சுதான். அப்போ தோணிச்சு எம்பொண்ணு நான் ஒழுங்கா இல்லனா எப்படி மத்தவங்க முன்னாடி தல நிமிர்ந்து நிப்பான்னு . என்னோட தங்க பொண்ணு நீ வந்த பொறுப்பும் தானா வந்துச்சு. இப்போதான் என்னோட கைய புடிச்சு நடக்க ஆரம்பிச்ச மாதிரி இருக்கு அதுக்குள்ள உன்ன இன்னொருத்தர் கைல புடிச்சு குடுக்க போறேன்

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now