இணை பிரியாத நிலை பெறவே -19

5.5K 217 86
                                    

ஜெய் :என்னடா உளற அதெல்லாம் ஒண்ணும் இருக்காது

ராம் :இல்ல டா என்னோட மனசு சொல்லுது ஏதோ தப்பா இருக்கு

ஜெய் :அதெல்லாம் ஒண்ணும் இல்லடா உனக்கு அப்டி தோணிச்சுனா பேசாம அம்மாக்கு கால் பண்ணி பேசு உனக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கும்

ராம் :அதுவும் சரிதான்

ராம் போன் செய்து ஜானகியிடம் பேசினான். பிறகு அவன் முகம் சற்று தெளிந்தது

ஜெய் :இப்போ எப்படி பீல் பண்ணற

ராம் :ஹ்ம்ம் மச் பெட்டெர். ஒரு நிமிஷம் சீதா ஏன் இன்னும் கால் பண்ணல

ஜெய் :சரி அவங்க கிட்டயும் பேசு அப்போவாது உனக்கு நிம்மதியா இருக்கும்

ராம் சீதாவிற்கு அழைக்க முற்பட்ட போது சீதா அழைத்தாள்.

சீதா :ஹலோ என்னங்க

ராம் :சொல்லு சீதா ஏன் வாய்ஸ் ஒருமாதிரியா இருக்கு

சீதா :இல்ல நீங்க கொஞ்சம் ஹாஸ்பிடல் வரிங்களா

ராம் :என்ன என்ன ஆச்சு உனக்கு எந்த ஹாஸ்பிடல் சொல்லு

சீதா :நான் நல்லாத்தான் இருக்கேன் ஆனா டிரைவர் தாத்தா தான் திடீர்னு மயங்கிடாரு. நீங்க கொஞ்சம் வரிங்களா ப்ளீஸ்(உடைந்த குரலில் )

ராம் :சரி நான் வரேன் அழாத எந்த ஹாஸ்பிடல்

சீதா :k.S.ஹாஸ்பிடல்

ராம் :வரேன் நீ அழாதே இன்னும் கொஞ்சம் நேரத்தில் வந்திடுவேன்.

சீதா :ஹ்ம்ம்

ஜெய் :என்ன டா ஆச்சு

ராம் :டிரைவர் அங்கிள் மயக்கம் போட்டு விழுந்துடார் போலடா அதான் பயந்துட்டா நான் இப்போவே ஹாஸ்பிடல் போறேன். அவ ஏதோ பயத்துல இருக்கா நான் இப்போ அவ கூட இருக்கணும்

ஜெய் :நானும் வரேன்

ராம் :இல்ல நீ இங்க இரு நான் போறேன். நீ மீட்டிங் பாத்துக்கோ

ஜெய் :சரி டா எமர்ஜென்சின்னா கூப்டு

ராம் :ஹ்ம்ம

இணை பிரியாத நிலை பெறவே On viuen les histories. Descobreix ara