இணை பிரியாத நிலை பெறவே -29

3.6K 132 28
                                    

ராம் வீட்டை விட்டு வெளியே வரும்போது கிட்டதட்ட மொத்தமாக உடைந்து போனான். சீதா காரை ஓட்ட ராம் அமைதியாக இருந்தான்.

ஹாஸ்பிடல்

டாக்டர் :உங்க வைப் இப்போ நல்லா இருகாங்க டெலிவரிக்கு இன்னும் ரெண்டு வாரம் இருக்கு சோ நீங்க பயப்படாம வீட்டுக்கு போங்க அப்புறம் எப்போ அவங்களுக்கு வலி வந்தாலும் கூட்டிட்டு வந்துருங்க

ஜெய் :சரி டாக்டர். ரொம்ப தேங்க்ஸ்

டாக்டர் :இது என் கடமை

டாக்டர் வெளியே சென்று விட்டார்

நிரஞ்சனா :என்னங்க மாமா அக்கா எங்க

ஜெய் :அவங்கள நான்தான் லேட் ஆகுதுன்னு வீட்டுக்கு அனுப்புனேன்

நிரஞ்சனா :ஓ அப்டியா சரி. ஏங்க நாளைக்கு நீங்க என்ன மகிஷாவ பாக்க கூட்டிட்டு போறீங்களா அவங்க கிட்ட தேங்க்ஸ் சொல்லணும் அவங்க இல்லைன்னா என்னால நினைச்சு கூட பாக்க முடியல

ஜெய் :சரி கூட்டிட்டு போறேன் இப்போ லேட் ஆகுது நீ தூங்கு நாளைக்கு நம்ம வீட்டுக்கு போலாம்

நிரஞ்சனா :ம்ம்ம் சரி

சீதாவும் ராமும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

ஜானகி :ராம் சீதா நில்லுங்க. ஏன் இவ்ளோ நேரம்

சீதா :இல்ல அத்தை சாப்ட போனோம் அதான் லேட்

ஜானகி :ஒரு போன் பண்ணி இருக்கலாமே மா

சீதா :அது வந்து

ராம் நேராக ரூமிற்கு சென்று விட்டான்

ஜானகி :சீதா என்ன ஆச்சு உங்க ரெண்டு பேருக்கும் எதாவது சண்டையா

சீதா :அத்தை நான் நாளைக்கு எல்லாத்தையும் சொல்றேன் இப்போ ப்ளீஸ் என்னால எதுவும் சொல்ல முடியாது ப்ளீஸ் அத்தை நீங்க கவலை படற அளவுக்கு ஒண்ணும் இல்ல போய் தூங்குங்க

ஜானகி :நீ சொல்றேன்னு நானும் போறேன். பாத்துக்கோ எந்த கஷ்டத்தையும் மனசுல வசிக்காத

சீதா :சரி அத்தை

சீதா ரூமிற்குள் நுழைந்தாள் ராம் வானத்தில் நிலவினை வெறுமனே பார்த்துகொண்டிருந்தான்

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now