epilogue ❣️

2.3K 78 31
                                    

வணக்கம் மக்களே என்கிட்ட நிறைய பேர் ஒரு epilogue போட சொல்லி கேட்ருநதிங்க அப்போ என்னால போட முடியல காரணம் நான் இதுக்கு முன்னாடி அப்படி எழுதுனது இல்ல அதோட நான் அந்த நேரத்துல wattpad uninstall panni இருந்தேன். சரி எது எப்டியோ epilogue எழுத முடிவு பண்ணியாச்சு சரி எழுதுவோம்.
இணை பிரியாத நிலை பெறவே.

ராம் தன்னுடைய வேலையை பார்த்து கொண்டிருந்தான். அவன் அருகில் சீதா வந்தாள்.காபி கப்புடன்.

ராம் :என்ன நீ காபி கொண்டு வந்துருக்க.

சீதா :பின்ன நான் கொண்டு வராம யாரு கொண்டு வருவா.

ராம் :அத்தை கிட்ட கொடுக்க சொல்ல வேண்டியது தானே ஏற்கனவே கால் எல்லாம் வீங்கி நைட் கால பிடிச்சிட்டு உக்காந்திர்ற

சீதா :நான் தான் தேன் முட்டாய் வேணும்ன்னு கேட்டேன் அதான் எடுத்து வர போயிருக்காங்க .  அப்புறம் கால் வலிக்குதுன்னு சொன்னா தான் பிடிச்சி விட நீங்க வந்துடுரிங்களே. அதனால கால் வலி வந்தாலும் பிறவாயில்லை 

ராம் :ஆஹ் இப்போ இப்படி சொல்லு அப்புறம் இடுப்பு வலி கால் வலின்னு சொல்லு புடிச்சி விட வந்தா ஐயோ என்ன பண்றீங்க அப்படின்னு பதறு.

சீதா :அது சரி காபி குடிங்க அத்தை மாமா எப்போ வருவாங்க

ராம் :இன்னும் கொஞ்சம் நேரம் கழிச்சு வருவாங்க.

சீதா :எனக்கு அம்மா வீட்ல இருக்குற மாதிரியே இல்லை நம்ம வீட்ல இருக்குற மாதிரி தான் இருக்கு. தினமும் அத்தை மாமா வர்ராங்க. நீங்க எனக்காக இங்க வர்றிங்க எனக்கு ஒரே ஹாப்பியா இருக்கு தெரியுமா.நான் ரொம்ப லக்கி. ஆமா உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும்

ராம் :என்ன

சீதா :பாப்பா பொறந்ததுக்கு அப்புறம் உங்களுக்கு நான் புடிக்குமா இல்லை பாப்பா புடிக்குமா

ராம் :இதே கேள்விய நான் கேட்டா நீங்க என்ன சொல்லுவிங்க

சீதா :இது செல்லாது நான் தான் கேள்வி கேட்டேன் பதில் எனக்கு வேணும்.

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now