இணை பிரியாத நிலை பெறவே -21

6.2K 216 70
                                    

சீதா ராமை திரும்பி கூட பார்க்கவில்லை அப்படியே உறங்கிவிட்டாள் ராமும் அப்படியே எதை எதையோ யோசித்தவன் எப்பொழுது உறங்கினோம் என்று தெரியாமலேயே உறங்கி போனான்.

காலையில் எழுந்த ராம் அறையில் சீதாவை தேட சீதா இல்லை இவ்வளவு காலையில் எங்கே சென்றாள் என்று யோசித்தவாறே கீழே வந்தவன் தன்னுடைய தந்தையிடம் சென்றான்.

ராம் :அப்பா அம்மா சீதா எங்க

பாலகிருஷ்ணன்:கோவிலுக்கு போயிருக்காங்க சரி நீ ரெடி ஆகு இண்ணைக்கு பொண்ணு பாக்க போகணும் இல்லையா. அவங்க இப்போ வந்துடுவாங்க

ராம் :சரிப்பா நான் ரெடி ஆகுறேன்

ராம் சென்று தயாராகி விட்டு கீழே இறங்கி வந்தான் கீழே வரும்பொழுது சீதாவின் குரல் அவனுக்கு தெளிவாக கேட்டது முடிந்த வரை அவளை பார்ப்பதை தவிர்த்தான் ராம்.

ஜானகி :என்னம்மா அப்டியே நிக்கிற அவனுக்காகத்தானே வேண்டிகிட்ட அவனுக்கு பிரசாதத்தை குடு

ஜானகி சொன்னதை கேட்டதும் ராம் சீதாவை பார்த்தான்.சீதா ராம் வாங்கி கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு தேவதை போலெ நின்று கொண்டிருந்தாள் சிரித்த முகத்துடன்.

சீதா :என்னங்க இந்தாங்க பிரசாதம் எடுத்துக்கோங்க

ராம் :ஹ்ம்ம்

சீதா :அத்தை நான் இப்போ வந்துடறேன்

சீதா ரூமிற்கு சென்று விட்டாள். ராம் குழப்பத்துடன் சீதாவின் பின் சென்றான்.

ராம் :இங்க என்ன நடக்குது நேத்து அப்படி பண்ண இண்ணைக்கு எனக்காக கோவிலுக்கு போற எனக்காக வேண்டிக்கிற ஏன் இதெல்லாம் பண்ற இப்படி நடிக்கிற
எனக்கு புரியல அம்மா அப்பக்காகவா ப்ளீஸ் அப்டினா இனிமேல் இப்படி பண்ணாத நீ நீயா இரு யாருக்காகவும் நடிக்காத

சீதா :எனக்கு நடிக்க தெரியாது புரிஞ்சுதுதா இப்போ லேட் ஆகுது போலாமா இல்ல பேசிக்கிட்டே இருக்கணுமா

ராம் :பேசணும் நிறைய பேசணும்

சீதா :டைம் இல்ல டைம் இல்ல

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now