இணை பிரியாத நிலை பெறவே -23

3.6K 149 37
                                    

காரில் சென்று கொண்டிருக்கும் போதே சீதாவின் மயக்கம் தெளிய கண் விழித்தவள் ராம் ராம் என்று பிதற்ற ஆரம்பித்தாள்

ஜெய் :அண்ணி அண்ணி ஒண்ணுமில்ல பதறாதீங்க நாம்ம வந்துட்டோம்

சீதா :ஆனா இங்க ஹாஸ்பிடல் இல்லையே அவர்கிட்ட போணும் ஆனா நம்ம எங்க வந்துருக்கோம்

ஜெய் :நீங்க வர வேண்டிய இடம் இதுதான் போங்க இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேக்காதீங்க சரியா

சீதா :அவர் உள்ள இருக்காரா

ஜெய் :நீங்க உள்ள போங்க என்னால அவ்ளோதான் சொல்ல முடியும்

சீதாவை இறக்கி விட்டவன் நிற்காமல் சென்று விட்டான் சீதா வேகமாக தனக்கு முன்னே இருந்த கட்டிடத்தின்னுள் நுழைந்தாள் அங்கே அவளது கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை ராம் அங்கே நின்று கொண்டிருந்தான்

சீதா வேகமாக சென்று அவன் மார்போடு புதைந்துகொண்டாள் எங்கே அவனை விட்டுவிட்டால் அவளை விட்டு சென்று விடுவானோ என்ற அச்சமோ அவனை விட்டு அவள் விலக்கவில்லை

சீதாவினை மெதுவாக வலக்கியவன் அவளை பார்த்து சிறிது சிரித்துவிட்டு பளார் என்று கன்னத்தில் ஒரு அறை விட்டான்(me:o my god ).சீதா சிறிது கூட அசரவில்லை அவள் கன்னத்தில் மட்டும் அவன் விரலின் தடம்.

ராம் :இப்போ மட்டும் ஏன் சீதா வந்த அப்போ நான் செத்தாதான் உனக்கு என் மேல பாசம் வருமா உன்ன இங்க வர வைக்கிறதுக்காக நான் என்ன நாடகம் நடத்துனேனோ அதை நான் இப்போ உண்மை ஆகிடுறேன் அப்போ இதே மாதிரி எனக்காக இருப்ப இல்லை

சீதா :இல்ல அப்பு

ராம் :போதும் சீதா இந்த அப்பு எல்லாம் அண்ணைக்கு என்னமோ காதலே இல்லை பணத்துக்காகதான் எல்லாம்ன்னு சொல்லி இப்போ எதுக்கு அழுற எனக்காக ஏன் பதர்ற இந்த கண்ணீர் உண்மை தானே சீதா.

சீதா :அது

ராம் :இரு நான் பேசிக்கிறேன். ஒண்ணு பண்ணலாம் நான் செத்துடுறேன் அப்புறம் சொத்து எல்லாம் உனக்கு மட்டும் தான் அம்மா அப்பா என்ன விட உன்ன நல்லாத்தான் பாத்துக்குறாங்க சோ எப்படியும் நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க. சோ

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now