இணை பிரியாத நிலை பெறவே -31

5.6K 172 96
                                    

காலையில் விஷ்வா மகிஷாவின் வீட்டுக்கு வந்தான் விஷ்வாவின் கண் முன்னே மகிஷா நின்று கொண்டிருந்தாள். ஆனால் விஷ்வா கொடுத்த சாரீயை அவள் அணிந்திருக்கவில்லை. விஷ்வாவிற்கு சற்று ஏமாற்றம் தான்.

மகிஷா :வாங்க விஷ்வா எதாவது சாப்டிறீங்களா

விஷ்வா :இல்லை வேண்டாம் ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னிங்களே 

மகிஷா :ஆமா ரொம்ப முக்கியமான விஷயம் பேசணும்

விஷ்வா (m.v):நமக்கு ஒத்து வராது பிரண்ட்டா இருக்கலாம்ன்னு சொல்ல போறாளோ

மகிஷா :நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா

விஷ்வா :ஏது என்ன நான் சரியாதான் கேக்குறேன்னா

மகிஷா :சரியாதான் கேக்குது

விஷ்வா :நீ அந்த சாரீ கட்டலயே

மகிஷா :நீங்க என்ன லவ் பண்ணா தானே கட்ட சொன்னிங்க  நான் உங்கள கல்யாணம்  பண்றேன்னு தான் சொன்னேன் லவ் பண்றேன்னு சொல்லலயே

விஷ்வா :என்ன சொல்றிங்க மகிஷா

மகிஷா :விஷ்வா உங்கள ஒரு பேர்சன்னா எனக்கு பிடிக்கும் ஆனா லவ் அப்டின்னு எனக்கு உங்க மேல இப்போ வரைக்கும் வரல

விஷ்வா :அப்போ கல்யாணம் எதுக்கு

மகிஷா :ஏன்னா என்னால இதுக்கு மேல இந்த தனிமையோட போராட முடியாது நேத்து உங்க வீட்ல இருந்து வந்ததுக்கு அப்பறம் என்னால இந்த தனிமையை தாங்க முடியல ஐ நீட் அ பேமிலி விஷ்வா. உங்களை பார்த்த பிறகு எனக்கு பழக்கப்பட்ட தனிமை கூட என்னால சமாளிக்க முடியல அதனாலதான் கேக்குறேன் என்ன கல்யாணம் பண்ணிக்கிறிங்களா.

விஷ்வா :உன்ன கல்யாணம் பண்ணிக்க எனக்கு சம்மதம்தான் அது உனக்கே தெரியும் ஆனா உனக்கு ஒரு குடும்பம் வேணும்னா நீ என் வீட்டுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கனும்னு அவசியம் இல்லை. இப்போவே என்னோட வீட்டுக்கு வா போலாம். காதலே இல்லாம கல்யாணம் பண்ணி நீ வந்தா கஷ்டம்தான் படணும்

மகிஷா :நான் அப்படி வரணும்னா உன்ன ஏன் கேக்குறேன் எனக்கு உன்னோட மனைவியா வரணும் நம்ம கல்யாணம் பண்ணிட்டு காதலிக்கலாம் நம்மள பத்தி தெரிஞ்சிக்கலாம் எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு நிச்சயமா ஒரு நாள் நான் உங்கள காதலிப்பேன்னு நீங்க என்ன சொல்றிங்க உங்க விருப்பம்தான் எல்லாமே

இணை பிரியாத நிலை பெறவே Donde viven las historias. Descúbrelo ahora