இணை பிரியாத நிலை பெறவே 25

3.4K 145 42
                                    

சீதா எப்பொழுது உறங்கினோம் என்று தெரியாமலேயே உறங்கிபோனாள். காலையில் கண் விழித்து பார்த்தவள் ராமின் மிக அருகில் இருப்பதை உணர்ந்தாள்  அவனுடைய தெளிவான முகத்தை பார்த்தாள் அதில் எந்த கவலையும் இல்லை மிகவும் தெளிவாக இருந்தது

சீதா ராமின் தலையை கோதி விட்டு கொண்டிருந்தாள்

சீதா :இது எதுவரைக்கும் ராம் உங்க கூட நான் இப்படி இருக்குறது.

ராம் அசைவது போல தெரியவே சட்டென்று எழுந்து குளிக்க சென்று விட்டாள்.

ராம் :பதில் கேக்காம போற சீதா நான் உயிரோட இருக்குற வரை

தனக்குள்ளே சொல்லி கொண்டான்.சீதா வருவதற்குள் வேறு அறைக்கு சென்று தயாரானவன் அவளிடம் சொல்லாமலேயே சென்றும் விட்டான்.

சீதா ராமை தேடி வெளியே வர வேலைக்கார பெண்மணி ஒருவர் ராம் அவசர வேலையாக சென்று இருப்பதாகவும்  தன்னிடம் கூற சொல்லியதாகவும் சொன்னார்.

சீதா (m.v) :எல்லாமே புதிதாக இருக்கிறது நான்தான் பழகிக்கணும்

தொலைபேசி அடித்தது

ராம் :ஹலோ சீதா

சீதா :சொல்லுங்க ராம்

ராம் :இண்ணைக்கு ஈவினிங் ஒரு முக்கியமானவங்களை அறிமுக படுத்தி வைக்கணும்

சீதா :இல்லை எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு

ராம் :நீ வந்தே ஆகணும் அவ்ளோதான் பாய் ஈவினிங் நம்ம போறோம்  நீ என்கூட இருக்க போறதே கொஞ்சம் நாள் தானே சோ நீ எக்கியூஸ் சொல்லாத

சீதா :சரி நான் வரேன் நான் இப்போ நிரா வீட்டுக்கு போறேன் 

ராம் :நீ ஏன் என்கிட்ட இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்க இனி என்கிட்ட சொல்லவா போற

சீதா போனை வைத்து விட்டாள்.

  சீதா (m.v):இவனை நானே என்ன கடுப்புல இருக்கேன் இவன் என்னடான்னா எப்போ பாரு நீ இனி என்னோட வாழ்க்கையில இருக்க மாட்டேன்னு சொல்லிட்டே இருக்கான். ஒருவேளை ராம்கு எதாவது சந்தேகம் வந்திருக்குமோ அதான் என்னை குழப்பி உண்மையை வர வைக்க பாக்குறாரா இல்லை சீதா நீ குழம்பாத நம்ம வாழ்க்கையை விட மத்தவங்க உயிர் முக்கியம்.

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now