இணை பிரியாத நிலை பெறவே 22

3.6K 137 35
                                    

ஒரு வருடத்திற்கு பிறகு

ஜெய் :கோப படாத டா

ராம் :எல்லாத்துக்கும் ஒரு எல்லை இருக்கு டா என்ன நினைச்சிட்டு இருக்கா அவ இதுவரைக்கும் அவ பண்ணதெல்லாம் பல்ல கடிச்சிட்டு பொறுத்துட்டு இருந்ததுக்கு பரிசு இதானா இதுக்கு மேல என்னால கோபத்தை கண்ட்ரோல் பண்ண முடியாது இப்போவே நான் போய் அவளை பாக்குறேன்

ஜெய் :டேய் சொல்றத கேளுடா

ராம் :இதுக்கு மேல நான் யார் பேச்சையும் கேக்குற நிலைமையில இல்லை என் அன்பு மொத்தமும் அவளுக்கு கொடுத்த இப்போ கோபமும்(ராம் இவ்ளோ நேரம் பேசுனது மகிஷாவ பத்தி இல்லை சீதாவை பத்தி )

ஜெய் :கொஞ்சம் பொறுமையா இருடா

ராம் :நீ இப்போ என்கிட்ட பேசுறத விட்டுட்டு நிரஞ்சனா கூட இரு.  எப்போ டெலிவரி டேட் குடுத்துருக்காங்க.

ஜெய் :ரெண்டு வாரம் இருக்கு

ராம் :சரி நான் கிளம்புறேன் எதாவதுன்னா கூப்பிடு அப்புறம் பெரியவங்களுக்கு எதுவும் தெரியகூடாது.

ஜெய் :சரி டா

ராம் காரை எடுத்துக்கொண்டு வேகமாக புறப்பட்டான். அவன் எண்ணம் கடந்த ஒரு ஆண்டை சுற்றியே வலம் வந்தது மகிழ்ச்சியான அந்த நாட்களை மனம் நாடியது. கடந்த இரண்டு மாத கசப்புகள் அவனை காயப்படுத்தியது . ஏதோ நினைவில் காரை இன்னும் வேகமாக செலுத்தினான்.

சீதா நிரஞ்சனா வீட்டில் இருந்தாள்

நிரஞ்சனா :என்ன டி பிரச்சனை உனக்கு ஏன் இப்டி இருக்க

சீதா :ஒண்ணுமில்ல விடு

சீதாவின் தொலைபேசி அடித்தது

சீதா :என்ன சொல்றிங்க ராம் ராம் அவருக்கு

நிரஞ்சனா :மாமாக்கு என்ன

சீதா: ராம்க்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சாம் என்று சொன்னவள்  மயக்கம் போட்டு விழுந்தாள்.அப்போது அங்கே ஜெய் வந்தான்.

ஜெய் :என்ன ஆச்சு

நிரஞ்சனா :அக்காக்கு கால் வந்துச்சு மாமாக்கு ஆக்சிடேன்ட் ஆயிடுச்சாம்

ஜெய் :என்ன சொல்ற சரி நீ இரு நான் இவங்கள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறேன் பாட்டி தாத்தா கூடவே இரு என்னாலும் கால் பண்ணு

சீதாவின் மயக்கம் தெளியாததால் அவளை தூக்கி கொண்டு கார்ருக்கு விரைந்தான் ஜெய்.

கார் முன்நோக்கி பயணிக்க இப்பிரச்சனைக்கான காரணத்தை அறிய நாம் பின்னோக்கி பயணிப்போம்.

Concept kidaichiduchi ini summa therika vidalam.

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now