இணை பிரியாத நிலை பெறவே -3

6.4K 224 27
                                    

ஜானகி :இங்க பாருங்க நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல எங்களுக்கு பொண்ண ரொம்ப பிடிச்சிருக்கு. எங்களுக்கு பிடிச்சா அவனுக்கும் பிடிச்ச மாதிரிதான். குருஜியே உங்க குடும்பத்தை தங்கமான குடும்பம்னு சொல்றாருன்னா நீங்க எவ்ளோ நல்லவங்கனு தெரியுது.
அப்புறம் எங்களுக்கு இஷ்டம் ஆயிரம்தான் இந்த கல்யாணம் ரெண்டு பேரோட ஜாதகம்மூலமா அமையபோறதா இருந்தாலும் பொண்ணோட விருப்பமும் ரொம்ப முக்கியம். அதனால பொண்ணுக்கு எங்க பையனை பிடிச்சிருக்கான்னு கேளுங்க.

ராம் எதுவும் பேசவில்லை ஏனெனில் அவனோட அம்மாவை பற்றி அவனுக்கு தெரியும் அவர் ஒன்றை சொன்னால் கண்டிப்பாக செய்வார். தன் தாயின் உயிருடன் விளையாட அவன் விரும்பவில்லை.

சுப்ரதா :எங்களுக்கும் பையனை பிடிச்சிருக்கு. எங்களுக்கு புடிச்சா பொண்ணுக்கும் பிடிச்ச மாதிரிதான்.அம்மாடி சீதா உனக்கு மாப்பிள்ளை பிடிச்சிருக்கா

சீதா (m.v):இல்ல இல்ல

சீதா :பிடிச்சிருக்கு

சேகர் :நீங்க என்னதான் பொண்ண பிடிச்சிருக்குனு சொன்னாலும் பையனும் ஒரு வார்த்தை பொண்ண பிடிச்சிருக்குனு சொன்னா நாங்க கொஞ்சம் நிம்மதியா இருப்போம்

ராம் :மாமா அப்படி கூப்பிடலாம் இல்ல (me:என்ன ஒரு நடிப்பு )

சேகர் :கூப்பிடுங்க

ராம் :எனக்கு உங்க பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு

சீதா (m.v):கண்டிப்பா கனவுதான்

கிருஷ்ணன் :சீதா இனி எங்க வீட்டு பொண்ணு அதனால வர தட்சனைன்னு எதுவும் வேண்டாம்

சேகர் :சம்மந்தி மூத்த பொண்ணு கல்யாணம் எங்க குலதெய்வம் கோவிலில்தான் நடத்தணும்னு ஆசை. உங்க விருப்பம் என்ன

ஜானகி :பொண்ண பெத்தவங்களுக்கு ஆசை இருக்காதா. சரி சம்மந்தி கல்யாணம் சிம்பிள்லா கோவிலிலும் ரிசெப்சன் நம்ம கிராண்ட்டா பண்ணிடலாம்

கிருஷ்ணன் :அப்புறம் என்ன நிச்சயதார்தத்துக்கும் கல்யாணத்துக்கும் தேதி குறிச்சிரலாம்

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now