இணை பிரியாத நிலை பெறவே -5

5.6K 184 24
                                    

வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையையும் சுற்றி காண்பித்தார் ஜானகி. ஒரு அறையில் முழுக்க முழுக்க குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் இருந்துது. சீதாவிற்கு ஏற்கனவே தெரியும் ராமிற்கு தங்கை இருந்ததும் சிறு வயதிலேயே இறந்ததும் எனவே அவள் ஓரளவிற்கு யூகித்தாள்

ஜானகி :இது என்னோட பொண்ணோட பொருள் இருக்குற அறை எப்போ கஷ்டம் வந்தாலும் இங்கேதான் வருவேன். நீ கூட எனக்கு பொண்ணு மாதிரி தான் உனக்கு என்ன வேணும்னாலும் என்கிட்ட கேளும்மா. (கண் கலங்கினார் )

சீதா :ஐயோ அம்மா ஏன் அழறீங்க நான் இருக்கேன் இல்ல இனி எதுக்கும் நீங்க அழ கூடாது சரியா.

ஜானகி :சரி

அங்கே பாலகிருஷ்ணன் வர அவர்களிடம் பேசி மகிழ்ச்சியாக இருந்தவளை சிலர் அலங்கரித்து அவன் அறைக்கு அழைத்து (இழுத்து )சென்றனர்.

சீதா (m.v):இவ்ளோ பெரிய வீடு இத்தனை ரூம் இருக்கு ஆனாலும் நான் இவர்கூடத்தான் இருக்கணுமா கொடுமை டா. ஐயோ உள்ள வேற தள்ளி விடறாங்களே இவர் என்ன அமைதியா இருக்காரு இப்போ என்ன பண்ண செம்ம டையர்ட்டா இருக்கு. போய் தூங்குவோம்.

சீதா நேராக கட்டிலை நோக்கி சென்றாள் ராம் சோபாவில் இருந்து எழுந்து வந்தான். சீதாவின் கைகளை பிடித்தான்.

ராம் :ஹே என்னோட பெட்ல வேற யாருகூடயும் நான் ஷேர் பண்ண மாட்டேன்

சீதா :அதை நீங்க சும்மாவே சொல்லி இருக்கலாம் இல்ல எதுக்கு கை எல்லாம் பிடிக்கணும்

சீதாவின் கைகளை சட்டென்று உதறியவன் பேச ஆரம்பித்தான்

ராம் :நீ சோபால படுத்துக்கோ நான் இங்க படுத்துக்குறேன்

சீதா :முடியாது. இங்க பாருங்க நான் சோபால படுத்து பழக்கம் இல்ல.அதனால இந்த பெட் பெருசாதான இருக்கு அந்த பக்கம் நீங்க படுத்துகோங்க இந்த பக்கம் நான் படுத்துக்குறேன்

ராம் :இல்ல கூடாது

சீதா :என்ன நீங்க பண்றது சின்ன புள்ளத்தனமா இருக்கு இது தள்ளுங்க மிஸ்டர் தூக்கம் வருது

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now