இணை பிரியாத நிலை பெறவே- 28

3.5K 131 38
                                    

மகிஷா :என்ன ராம் உனக்கு புரியலயா சரி நான் இப்போ உன்கிட்ட ஒண்ணு கேக்குறேன் இல்ல நீ வேண்டாம் சீதா நீ சொல்லு

சீதா :என்ன சொல்லணும்

மகிஷா :ஒரு பொண்ணு நல்ல பொண்ணா கெட்ட பொண்ணான்னு எதை வச்சி சொல்லுவ அவங்க கேரக்டர் வச்சா இல்ல அப்பியரென்ஸ் வச்சா

சீதா :அவங்க கேரக்டர் வச்சிதான்

மகிஷா :வெரி குட் ஆனா உன்னோட புருஷன் அப்படி இல்ல அவனுக்கு உன்ன மாதிரி பொண்ணுன்னா நல்லவ என்ன மாதிரி டிரஸ் போடற பொண்ணு கெட்டவ.

சீதா :அவர் அப்படி பட்டவர் இல்ல

மகிஷா :ஹோய் என்ன எதிர்த்து பேசாத அங்க உன் தங்கச்சி இருக்கா மறந்துடாத. என்னோட வாழ்க்கையிலேயே நான் பண்ண பெரிய தப்பு என்ன தெரியுமா இவனை மாதிரி ஒருத்தனை லவ் பண்ணதுதான். உண்மையா லவ் பண்ண அந்த ஒரே காரணம் மட்டும் தான் இருக்கு இவன் என் முன்னாடி நிக்க.

ராம் :காதல்ன்னு சொல்ல கூட உனக்கு தகுதி இல்ல

மகிஷா :இதான் நீ சரி நீங்க சொல்லுங்க ராம்  காதலிக்க என்ன தகுதி வேணும் எனக்கு தெரிஞ்சா நானும் வளத்துப்பேன்.என்ன அழகா இருக்கணுமா அறிவா இருக்கணுமா பணம் இருக்கணுமா எல்லாமே இருக்கே என்கிட்ட .இதுல எதுல உன்னோட மனைவியை விட நான் குறைஞ்சு போய்ட்டேன்னு தெரியல

ராம் :நல்ல மனசு அதுல சீதா கிட்ட கூட உன்னால வர முடியாது

மகிஷா :அப்டியா சீதா உன்கிட்ட என்ன்னால வர முடியாதா.உங்களாலதான் என்கிட்ட வர முடியாது. நீங்க கேள்விபட்டுஇருப்பிங்களே  குரு மகிந்ரா டிரஸ்ட் அத நடத்துறதே நான்தான் எல்லாரும் சின்ன வயசுல பர்த்டே கிப்ட்டா பொம்மை கேப்பாங்க கோவில்ல அர்ச்சனை பண்ணுவாங்க ஆனா என் பர்த்டேக்கு என்னோட கிபிட் என்ன தெரியுமா ஒரு கிராமம் ஆமா நான் ஒவ்வொரு கிராமம் தத்தெடுபேன்.
என்னோட வருமானம் எல்லாமே இல்லாதவங்களுக்கு தான் செலவு பண்ணேன் பண்றேன் பண்ணுவேன். ஆனாலும் இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது ஏன்னா எனக்கு நான் செய்றத வெளிய சொல்ல பிடிக்காது. அதான் எங்க அப்பாவோட ஒரே உண்மையான பிரண்ட்டை அந்த டிரஸ்ட்டை பாத்துக்க சொல்லியிருக்கேன். இப்போ சொல்லு நான் உன்னோட வைப்க்கு சமமா கிடையாது.

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now