இணை பிரியாத நிலை பெறவே -11

5.3K 192 46
                                    

ராம் அலுவலகத்தில் ப்ரெசென்ட்டேஷன் முடித்துவிட்டு சோர்வாக அமர்ந்திருந்தான்.

ஜெய் :என்ன டா செம்ம டயர்ட்டா

ராம் :ஆமா டா ஒரு கப் காபி கிடைச்சா நல்லா இருக்கும்

ஜெய் :சரி கொண்டுவரேன்

ராம் அப்படியே கண்களை மூடி சாய்ந்தான். திடீரென்று சீதா அங்கே இருப்பதாக தோன்ற கண்களை திறந்தவன் சீதா தடுமாறி  நடந்து வந்து கொண்டிருப்பதை பார்த்தான்.

ராம் (m.v):உடம்பு சரி இல்லன்னு ரெஸ்ட் எடுக்க சொன்னா இங்க என்ன பண்ரா

ராம் வேகமாக வெளியே சென்றான். அப்போது அங்கே ஜெய் வந்தான்

ஜெய் :டேய் எங்க போற இவ்ளோ வேகமா

ராம் :இல்லடா சீதா பாவம் கஷ்டபட்டு நடந்து வந்துட்டு இருக்கா

ஜெய் :அண்ணியா இங்கயா இல்லையே. அவங்க வீட்டுல தான் இருப்பாங்க

ராம் :இல்ல அவளை பார்த்தேன்.

சுற்றிபார்த்தான் அங்கே யாரும் இல்லை

ஜெய் :ஏன்டா இந்த காதல் வந்தா நம்ம காதலிக்கிறவங்க தான் எல்லா இடத்துலயும் தெரிவாங்களாமே அப்டியா

ராம் :என்ன கொழுப்பா.

சீதாவின் எண்ணிற்கு அழைத்தான்

ராம் :ஹலோ சீதா

சீதா :சொல்லுங்க ராம்

ராம் :எங்க இருக்கீங்க

சீதா :வீட்டுல தான் ஏன் கேக்குறீங்க

ராம் :இல்ல சும்மாதான். ரெஸ்ட் எடுங்க

சீதா :சரிங்க. உங்களுக்கு வேலை எப்படி போச்சு

ராம் :நல்லா போச்சு

இப்படியே இருவரும் அரைமணி நேரம் பேசினர்

சீதா :சரிங்க சாயங்காலம் பாக்கலாம்

ஜெய் :ஏண்டா இங்க கொஞ்ச நாளைக்கு முன்னாடி வரைக்கும் ஒருத்தன் விறைப்பவே சுத்திட்டு இருந்தான் இப்போ என்னடான்னா பல்ல பல்ல காட்டி பேசிகிட்டு இருக்கான்.

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now