இணை பிரியாத நிலை பெறவே -14

5.2K 190 42
                                    

மாப்பிள்ளை அது நீங்க இவ்ளோதூரம் சொல்றிங்க எங்க சொந்தத்துல ஒருத்தங்க சீதாவை பொண்ணு கேட்டாங்க நாங்களும் அவங்களுக்குதான் சீதாவை கட்டி தரலாம்னு இருந்தோம் ஆனா ஜாதகம் பொருத்தம் இல்ல அப்றம் தான் கடவுள் அருளால நீங்க மாப்பிள்ளையா கிடைச்சிங்க. அதான் நிரஞ்சனாவை அவங்க பையனுக்கே கட்டி தரலாம்னு முடிவு பண்ணிட்டு நேத்து தான் அவங்களுக்கு வாக்கு குடுத்தேன். . அதனால தப்பா எடுத்துக்காதீங்க மாப்பிள்ளை.

இதை கேட்ட இதயத்தில் கட்டிய கோட்டை உடைந்த கவலையில் ஜெய் போனை கட் செய்தான். ராம் ஏதோ சொல்ல வர வாசலில் யாரோ வர அழைக்கும் குரல் கேட்க அனைவரும் திரும்பி பார்த்தனர். அங்கே சேகர் பேசிக்கொண்டிருந்த வசந்தி நின்றார்

சேகர் அவரை வரவேற்க வரவேற்க செல்ல ராம் சீதாவிடம் வந்திருப்பது யார் என்று கேட்டு தெரிந்துகொண்டான்.

சேகர் :உக்காருமா

சீதா :என்னங்க வாங்க போய் ஆசிர்வாதம் வாங்குவோம்

ராம் :ஆசீர்வாதம் பண்ணுங்க ஆன்ட்டி

வசந்தி :ஐயோ என்ன இது நல்லா இருங்க எழுந்திருங்க. என்னபா நீ தான் மாப்பிள்ளையா நல்லா பத்துக்கோப்பா நல்ல பொண்ணு. ஐயோ என்ன மாப்பிள்ளை நிக்கிறிங்க உக்காருங்க.

வெள்ளந்தியாக பட படவென்று பேசிக்கொண்டே சென்றார்

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

வெள்ளந்தியாக பட படவென்று பேசிக்கொண்டே சென்றார்.

சுபத்ரா :இந்தாங்க அண்ணி காபி குடிங்க

வசந்தி :அது இருக்கட்டும் இங்க நான் வந்ததே முக்கியமான விஷயம் பேசத்தான்

சேகர் :சொல்லும்மா

வசந்தி :அண்ண நேத்து நீங்க சொன்னிங்க நிரஞ்சனாவை என் புள்ளைக்கு கட்டி தரேன்னு

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now