இணை பிரியாத நிலை பெறவே -20

5.1K 195 65
                                    

காலையில் சீதா மருத்துவமனைக்கு செல்ல தயாராகி கொண்டிருந்தாள். ராம் அலுவலகத்திற்கு செல்ல தயாராகிக்கொண்டிருந்தான்.

ராம் :ஹே நான் நேத்து ஒண்ணு உன்கிட்ட கேக்கணும்னு சொன்னேன்ல அதை இப்போ கேக்குறேன்.

சீதா :இல்ல வேண்டாம் ப்ளீஸ் நைட் கேளுங்க ப்ளீஸ் ப்ளீஸ்

ராம் :என்ன நீ டீச்சர்கிட்ட ஸ்டுடென்ட் சொல்ற மாதிரி சொல்லிக்கிட்டு இருக்க

சீதா :எனக்கு டைம் ஆச்சுங்க நான் தாத்தாவை பாக்க போணும் சோ ப்ளீஸ்

ராம் :சரி நான் உன்கிட்ட நைட் கேக்குற அப்போ எந்த காரணமும் சொல்ல கூடாது புரிஞ்சிதா

சீதா :சரிங்க பாஸ் இப்போ நான் போகவா

ராம் :போய்ட்டு வா. ஹே ஒரு நிமிஷம் நீ தாத்தாவை பார்த்துட்டு ஆபீஸ் வா நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஷாப்பிங் போலாம்

சீதா :என்ன திடீர்னு

ராம் :சும்மாதான் போலாமா

சீதா :போலாமே

சீதா ஹாஸ்பிடலுக்கும் ராம் ஆஃபீஸிற்கும் சென்றுவிட்டான்.
அலுவலகத்தில் ஜெய் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருந்தான்.

ராம் :என்னடா இண்ணைக்கு மீட்டிங் பத்தி யோசிக்கிறியா

ஜெய் :மீட்டிங் பத்தி இல்ல மீட் பண்றத பத்தி யோசிச்சிட்டு இருக்கேன்

ராம் :யாரை

ஜெய் :நிரஞ்சனாவை தான்

ராம் :நாளைக்கு பாக்கதானே போற அப்புறம் என்ன டா

ஜெய் :அட போடா உனக்கு என் பீலிங்கே புரியல. டேய் அவ என்கிட்ட போன்ல கூட பேசல  நேர்ல எங்கயும் கல்யாணத்துக்கு முன்னாடி வர மாட்டாளாம். நீதான் ஹெல்ப் பண்ணனும்

ராம் :என்ன பண்ணனும்னு சொல்லு பண்ணி தொலைக்கிறேன்.

ஜெய் :நான் கூப்பிட்டாத்தானே வர மாட்டா சீதா அண்ணி கூப்டா வருவா இல்ல  கூப்பிட சொல்லுடா வெளியே போவோம்

ராம் :சரி நான் கேட்டுதொலைக்கிறேன் இப்போ மீட்டிங் வேலையை பாரு.

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now