இணை பிரியாத நிலை பெறவே -8

5.4K 193 55
                                    

காலையில் கண் விழித்த சீதாவின் கைகள் ராம் மீது இருப்பதை பார்த்து அதிர்ந்தவள் அவன் மீது இருந்து கைகளை எடுக்க ராம் கண்விழித்தான்.

ராம் :இது உனக்கே ஓவரா இல்ல

சீதா :என்ன ஓவர்

ராம் :இல்ல என்னமோ இண்ணைக்குதான் என்மேல கை போடற மாதிரி இவ்ளோ சாக் ஆகுற.கை படறதுக்கே யோசிக்கிறவ ஏன் இங்க படுக்குற சோபால படுக்க வேண்டியதுதானே. அதானே நீ எப்படி அங்கே படுப்ப இவ்ளோ பெரிய பெட்லயே நீ அந்த கார்னெர்ல இருந்து இந்த கார்னெர் வந்துடற இதுல சோபால படுத்தா அவ்ளோ தான் ஒரு நாளைக்கு பத்து வாட்டி கீழ விழுவ.

சீதா :இங்க பாருங்க சின்ன வயசுல இருந்து தங்கச்சி கூட படுத்து பழக்கம் எப்போவும் அவ மேல கை கால் போட்டு தான் தூங்குவேன் அதான் சட்டுன்னு மாத்திக்க முடியல. அதோட யாரும் ஆசைப்பட்டு உங்க மேல கை போடல சரியா. அதனால அதிர்ச்சி ஆகத்தான் செய்வேன். அப்புறம் நீங்க என்ன எழுப்பி சொல்லணும் கை போடாதன்னு

ராம் :நீ கும்பகர்ணனுக்கு தங்கச்சியா இருக்குறப்போ நான் எப்படி உன்ன அவ்ளோ சீக்ரம் எழுப்புறது

சீதா :என்னவோ சொல்றிங்க இனி நான் கை போட மாட்டேன்

ராம் :பாக்கலாம்

சீதா:பாக்கலாம்.

சீதா தயாராகி அத்தை மாமாவுக்காக காத்திருந்தாள். ராம் தயாராகி வேலைக்கு சென்று விட்டான்.பிறகு பாலகிருஷ்ணன் தம்பதி வந்தவுடன் அவர்களுடன் சிறிது நேரம் பேசிவிட்டு தன்னுடைய அறைக்கு சென்றாள்.
சிறிது நேரம் தன்னுடைய பெற்றோரிடமும் நிரஞ்சனாவிடம் பேசினாள். நேரம் நகர மறுக்கவே அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இஷ்டமே இல்லாமல் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்தவள் திடீரென்று அவளுக்கு பிடித்த விஸ்வரூபம் படத்தின் உன்னை காணாது நான் இங்கு நான் இல்லையே பாடல் வர அவளும் துப்பட்டாவை இடுப்பை சுற்றி கட்டியவள் அமைதியாக ஆட தொடங்கினாள். பாடிக்கொண்டே ஆடிக்கொண்டிருந்தாள் அப்போது பின்பிருந்து வந்து என்னை பம்பரமாய் சுழற்றி விட்டான் என்று சுற்றிக்கொண்டு திரும்ப ராம் நின்றுகொண்டிருந்தான்.

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now