இணை பிரியாத நிலை பெறவே -13

5.2K 197 81
                                    

அழைப்பு வருமா வராதா என்ற ஏக்கத்துடன் சீதா இருக்க திடீரென்று மொபைல் சிணுங்க ஆரம்பித்தது மொபைல்லை ஆர்வமாக எடுத்து பார்த்தாள் சீதா

நிரஞ்சனா :என்ன மாமா கால் பண்ணிட்டாரா

சீதா :பண்ணிட்டாலும் இது என் காலேஜ் பிரண்ட்

தன் கல்லூரி சினேகிதியுடன் பேசி முடித்தவள் கட்டிலில் அமர்ந்தாள்.

நிரஞ்சனா :ஏன் டி அவ்ளோ ஆசை இருக்குறவ  நீயே கால் பண்ண வேண்டியது தான. மாமா கால் காகத்தானே வெயிட் பண்ற

சீதா :அவர் கால்காக யாரு வெயிட் பண்ணா எனக்கு தூக்கம் வரல நான் மாடிக்கு போறேன் அங்கேயும் வந்துராத

நிரஞ்சனா :ஹே போறவ ஏண்டி போன் கொண்டு போற ஒத்துக்கோ மாமா கால்காகத்தான் காத்திருக்கிறேன்னு ஒத்துக்கோ

சீதா இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தாள் உளறி கொட்டி விடுவோம் என்று மாடிக்கு சென்று விட்டாள். சிறிது நேரம் மாடியில் சென்று சுற்றி கொண்டிருந்தவள் மொபைலில் இருந்த ராமின் புகைப்படத்தை எடுத்தாள்.

சீதா (m.v):என்ன ஒரு போன் பண்ணா குறைஞ்சு போய்டுவீங்களோ இண்ணைக்கு மட்டும் நீங்க கால் பண்ணல நான் உங்க கிட்ட பேசவே மாட்டேன் (me :இப்போ மட்டும் மணிக்கணக்காவா  பேசுற 🙄)

போனையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருந்தவள் தானே அழைத்துவிடலாம் என்று போனை எடுத்தாள் அதற்குள் ராம் அழைத்தான் ❤❤❤❤❤❤❤

ஆர்வக்கோளாறில் முதல் அழைப்பிலேயே எடுத்து விட்டாலும் என்ன பேச வேண்டும் என்று தெரியவில்லை. சிறிது நேர மௌனத்தை ராம்தான்
கலைத்தான்

ராம் :போன் பண்ணுவேன்னு வெயிட் பண்ணியா

சீதா :இ இ இல்லையே 

ராம் :உண்மையாவா சொல்ற.

சீதா :ஏன் அப்டி கேக்குறீங்க

ராம் :இல்ல முதல் ரிங்லேயே எடுத்துட்ட அதான் கேட்டேன்

சீதா :நான் யூ டியூப்ல வீடியோ பாத்துட்டு இருந்தேன்

இணை பிரியாத நிலை பெறவே Where stories live. Discover now