2

18.5K 408 27
                                    

வாடா இன்னக்கி ஏன் லேட்டு என்று வினவியபடி வருணின் தலையில் வாஞ்சையாக தடவினார் வருணின் அன்னை ஜானகி.

வேலை அதிகம் அதான் மா...

ஏதோ யோசனையிலிருந்தவனை

ஏன்டா ஏதோ யோசனைலயே இருக்க...

எல்லாம் நம்ம சக்தி பத்தி தான்மா....

அவன் எப்படி டா இருக்கான் ஏன் இங்க வரவே மாட்டேங்குறான்.  நானும் அவனையும் என் புள்ளமாறிதான பார்த்துக்கிறேன்...

எனக்கும் இங்க வந்து தங்கிகோடானு சொல்லி வாய்தான் வலிக்குது. அவன் தான் புரிஞ்சிக்கமாட்றான்.

ம்ம்ம்.,, என்னமோ போ தாய இழந்தபுள்ள அந்த.ஆண்டவனா பாத்துதான் ஒரு நல்ல வழிய அவனுக்கு கொடுக்கனும்.

சரி ஃரெஷ் ஆகிட்டுவா சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.

ம்ம்ம்,,. சரி மா,,..என்றபடி வருண் தன் ரூமிற்கு சென்றான்.

ஜானகி அம்மாக்கு சக்தி னா ரொம்ப படிக்கும். சக்திக்கும் தான். இவங்க எவ்ளோ முறை வற்புறித்தியும் சக்தி இவங்களோட தங்க ஒத்துக்கல. அவன் அம்மா வாழ்ந்து இறந்த வீட்லதான் இருப்பேனு சொல்லி மறுத்ததுட்டான்.

சக்திக்கு அவன் அம்மானா உயிர். அப்பா இவன் பிறக்கறத்துக்கு முன்னாடியே இறந்துட்டாரு. இவன் அம்மா தான் ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க . சொல்வி இறந்து இரண்டு வருடம் ஆகுது.
செல்வி அம்மா பிரிவ அவனால தாங்கிக்க முடியல.
அவங்களோட நினைவுகளோட அந்த வீட்ல தனிமரமா வாழ்ந்துட்டு வரான்.
ஆபிஸ்ல கூட யார்கிட்டையும் பேச மாட்டான். நண்பன் னா அது வருண் மட்டும் தான்.ஆனா ஆபிஸ்ல உள்ள எல்லாருக்குமே சக்திய புடிக்கும் பெண்கள் உட்பட. ரேஷ்மா சக்தி பின்னாடி சுத்தறது எல்லாருக்குமே தெரியும்.     அவகிட்ட இருக்கற பணத்துக்கும் திமிருக்கும அழகுக்கும் மசியற ஆளு நம்ம சக்தி இல்ல . அதனாலயே எல்லாருக்கும் சக்திய ரொம்ப பிடிக்கும்.  எல்லார்க்கட்டையும் மரியாதையா பேசுவான் பழகுவான். வேலைனு வந்துட்டா  கெட்டிக்காரன் அதான் பாத்துருப்பிங்ளே லஞ்ச் ப்ரேக் ல வொர்க் பன்றத.

வீடு,  ஆபிஸ்,வருண் வீடு இதுதான் நம்ம சக்தியோட ரொட்டீன். அப்றம் சொல்ல மறந்துட்டேன் அன்னைஇல்லம். அம்மா இறந்தப்றம் அன்னை இல்லத்துக்கு போவான். தன்னால முடிஞ்சவுக்கு டொனேட் பன்னுவான். அப்றம் அங்க இருக்குற குழந்தைகளுடன் விளையாடுவான். நிறைய குட்டி பிரண்ட்ஸ் இருக்காங்க நம்ம சக்திக்கு.

இதய திருடா Where stories live. Discover now