47

10.9K 324 69
                                    

விடிந்தும் தூங்கிக் கொண்டிருந்தவளை வசந்தி எழுப்பவில்லை.

பத்திரத்தைத் திரும்ப பெற்றுக் கொள்வதற்காக சக்தி அங்கு  வந்திருந்தான்.

வாபா வந்து உட்காரு என சத்தியை சோபாவில் அமர வைத்துவிட்டு ஜூஸ் எடுத்துவந்துக் கொடுத்தார்.

வேண்டாம் என மறுத்தவனை வற்புறுத்தி குடிக்க வைத்தார்.

அவ தூங்குறா. நான் போய்  எழுப்பிக் கூட்டிட்டு வரேன் .ஒரு நிமிஷம் என்றவர் ஆதிராவின் அறையினுள் நுழைந்தார்.

ஆதிரா மா எழுந்திரி. பாரு சக்தி தம்பி வந்துருக்காங்க. எழுந்திரிடா என எழுப்பி விட்டார்.

பதறியடித்து எழுந்தவள் முகம் சந்தோஷத்தில் மலர்ந்திருந்தது.

எ..என்னமா சொல்ற சக்தி வந்துருக்கானா என மெத்தையிலிருந்து இறங்க முற்பட்டவளிடம்.

ஆமா அந்த பத்திரத்த வாங்கிட்டுப் போக வந்துருக்கு...என்றார்.

எந்த பத்திரம் என யோசித்தவளுக்கு  நேற்று நடந்தது நினைவு வந்தது. முகம் இறுகிப் போய் அமர்ந்திருந்தவளை மீண்டும் அழைக்க....

நான் வரல .அது டேபுள் மேலதான் இருக்கு நீயே குடுத்துரு.என்ன கேட்டா நான் தூங்குறேனு சொல்லிடு என மீண்டும் சுருண்டுப் படுத்துக் கொண்டாள்.அதற்கு மேல் அவளை வற்புடுத்தவில்லை.

நேற்று வரை சக்தியின் வரவை எதிர்ப்பார்த்திருந்தவளுக்கு இன்று அவன் வருகைப் பிடிக்கவில்லை.அவளது கண்ணீர் தலையனையை நனைத்துக் கொண்டிருந்தது.

ஆதிராவின் அறை மீதே கண் வைத்தமர்ந்திருந்தவனுக்கு ஏமாற்றமே.

அவ நல்லா தூங்குறா .எழமாட்றா.,.எனவும்.

இல்லமா பரவாயில்லை தூங்கட்டும் என சிரிக்க முயன்றான்.

விவாகரத்துப் பத்திரத்தைப் பெற்றுக் கொண்டவன் ஆதிரா  இட்ட கையொப்பத்தைப் பார்த்தான்.கண்கலங்க அதைக் கட்டுப் படுத்த முடியாதவன் கிளம்புவதற்காக எழுந்து நின்றான்.

இதய திருடா Where stories live. Discover now