10

12.3K 342 34
                                    

பயம் அதிகமாக வெளியே சென்று தேடலாம் என கதவை நோக்கி வந்தவன்  கிட்சனிலிருந்து சத்தம் வர கிட்சனுள் நுழைந்தான் .
.
.
.
.
.
அங்கு ஆதிரா கையில் கப்புடன் நின்றிருந்தாள்.

கப்பை அவனிடம் நீட்ட அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.

"நீ ஆபிஸ் கிளம்பு"... என்றாள் இறுகிய முகத்துடன்.

"இல்ல பரவால நான் இருக்கேன்.நீ இந்த வேலையெல்லாம் பார்க்க வேண்டாம் நானே சமைக்கிறேன். நீ ரெஸ்ட் எடுத்துக்கோ"...

"ம்ச் எனக்காக யாரும் வேலைய கெடுத்துட்டு இருக்க வேண்டா. நான் கண்டிப்பா சாகப்போற  முடிவ எடுக்க மாட்டேன். அதுக்கு நான் கோழையும் கிடையாது. என்ன நான் பார்த்துப்பேன் சோ ப்ளீஸ்,."...என்றாள்.

"ஹீம்."..,என்ற ஒற்றை பதிலை அளித்தவன் ஆபிஸிற்கு கிளம்ப ஆயத்தமானான்.
அவன் மனம் சற்று நிம்மதி அடைந்திருந்தது.

அவன் கிளம்பிச் சென்றவுடன். ஆதிரா வீட்டை நோட்டமிட்டுக் கொண்டிருந்தாள். வீடு குட்டியாக அழகாக இருந்தது. ஒரு சமையலறை ,ஒரு பூஜை அறை ,இரண்டு ரூம்கள் அதில் ஒன்று இப்பொழுது இருவரும் பயன்படுத்தும் அறை மற்றொன்று பூட்டினால் பூட்டப்பட்டிருந்தது.
அதை கவனித்தவள் அப்பொழுதிற்கு அதைப் பற்றி ஆராயாமல் விட்டுவிட்டாள்.

பூஜை அறையினுள் புகுந்தவள். கண்களை மூடியபடி ...

"கடவுளே இந்த இரண்டு நாள்ல என் வாழ்க்கை எப்படி எப்படியோ மாறிடிச்சு. என் அப்பா அம்மா கூட என்ன நம்பல. என்னால இத தாங்கிக்கவே முடியல. தயவு செஞ்சி அவங்களுக்கு புரியவச்சி என்னோட சேர்த்து வச்சிடு "...என கண்ணீர் மல்க இறைவனிடம் வேண்டிக்கொண்டாள்.
.
.
.
.
.
.
வருணின் கேபினுள் நுழைந்தவன்.
குழப்பத்துடன் ,.

"டேய் எல்லாரும் எனக்கு எதுக்கு டா கங்க்ராட்ஸ் சொல்றாங்க.அப்படி என்னத்த தான் சொல்லி வச்ச"... என சக்தி வருணின் மேல் எரிந்து விழ அவனோ...

"கூல் டா. ஒன்னுல நீ லவ் மேரேஜ் பன்னிக்கிட்ட அதனால தான் லீவுனு சொன்ன அதான் கங்க்ராட்ஸ் சொல்றாங்க."...

இதய திருடா Where stories live. Discover now