41

10.5K 300 45
                                    

அன்று மாலை ஆறு மணியளவில் வருணுடன்  பணிபுரியும் அனைவரும் வந்திருந்தனர்.

சக்தி தான் அவர்கள் தங்குவதற்கான அறைகளை தயார் செய்துக் கொடுத்தான்.

இன்பத்தின் போதும் துன்பத்தின் போதும் தனக்கு உருதுனையாய் இருந்த ஆருயிர் தோழனின் திருமணத்தில் ஓடி ஓடி வேலை செய்தான்.

ராஜேஸ் திருமணத்திற்கு சக்தி ஆதிராவை அழைத்துச் சென்றிருந்தமையால் வந்தவர்களுக்கு ஆதிராவை அறிமுகப்படுத்த அவசியமில்லை.

அன்று ஆதிராவை நடுவில் நிற்க வைத்து அரட்டையடித்தப் பெண்களும் வந்திருந்தனர் நிஷாவைத் தவிர.

நிஷா மதனைப் பற்றிய உண்மையை அறிந்த பின்பு பெங்களூரில் இருக்கும் தன் பெரியம்மாவின் வீட்டலிருந்தபடியே வேலைக்குச் செல்கிறாள்.

வருண் நிஷாவை போனில் அழைத்துத் திருமணத்திற்கு வருமாறுக் கூறினான்.

வருணிடம் கண்டிப்பாக வருகிறேன் என்றுச் சொன்னவள் சென்னை  வந்தாள் எங்கேனும் மதனை சந்திக்க நேர்ந்திடும் என்பதால் வரவில்லை.

மற்றப் பெண்களிடம் பேசும்போது அன்று போல் தயங்காமல் மிகவும் ஜாலியாகவே பழகினாள்.

நிஷாவும் இருந்திருந்தால் இன்னும் கலகலப்பாக இருக்கும் என நினைத்தாலும் அவளது நிலைமை என்னவென புரிந்துக் கொண்டாள்.

வருணின் பாடுதான் திண்டாட்டம் ஆகிப் போனது. இத்தனை நாள் காத்திருந்தவனால் இன்று ஒரு நாள் பொறுக்க முடியவில்லை.

ஒவ்வொரு நிமிடமும்  ஒரு யுகமாய் கடப்பதாக உணர்ந்தான்.

பொருமை இழந்தவன் நடு இரவில் மதியை எப்படியாவது பார்த்தாக வேண்டும் என அவள் அறை நோக்கிச் சென்றவன் அப்பத்தாவிடம் மாட்டிக்கொண்டான்.

வருணின் காதை திருகியபடியே அவனது அறை இழுத்து வந்தவர் வருணை அறையினுள் தள்ளி கதவை
வெளிப்புறத்தில் பூட்டி  நமட்டு சிரிப்புடன் மதியின் அறையில் நுழைந்துக் கொண்டார்.

இதய திருடா Where stories live. Discover now