29

9.9K 321 41
                                    

வருணை அரைந்த வேகத்தில் அவன் காலரைப் பிடித்தவள்

யாரக் கேட்டு அவர்கிட்ட என்ன கட்டிக்கப் போறவனு சொன்னிங்க.,,,.அவர் யார்னு தெரியுமா என்னோட அப்பா .,..நீங்க அப்படி சொன்னோன அவர் முகம் எப்படி இறுகிப் போச்சிப் பாத்திங்களா...ஏன் அப்படி சொன்னிங்க,.. என அவளது முழு பலத்தையும் சேர்த்து வைத்துக் கத்தியவள் பிறகு தனது சக்தியை இழந்தவள் போல் பேருந்து நிறுத்தம் என்றுக் கூடப் பார்க்காமல் தரையில் அமர்ந்தபடி அழத் தொடங்கினாள்.

மதி அந்தப் பெரியவரை தன் தந்தை எனக்கூறியதில் கூட அவன் அவ்வளவு அதிர்ச்சியடையவில்லை ,அவனை அரைந்தது சற்று முன் கோபமாக கத்தியது இது எல்லாம் தான் பெரும் அதிரச்சியைத் தந்தது.
இது நாள்வரை வருண் பார்த்த பயந்த சுபாவம் கொண்ட மதியழகியில்லை.

தரையில் அமர்ந்தபடி அழுதுக் கொண்டிருந்தவள்

என்னோட ஊர் ஒரு சின்ன கிராமம்.அங்க இருக்கிறவங்க யாருக்கும் படிப்பறிவு இல்ல.நான் ஆசப் பட்டேனு தான் எங்கப்பா என்ன படிக்கவச்சாரு. நானும் நல்லாப் படிச்சேன்.ஆனா நான் படிப்ப முடிச்சோனே எனக்கு கல்யாணம் பன்னி வைக்கப் போறதா சொன்னாரு.எனக்கு அதுல விருப்பம் இல்ல.அதுவும் இல்லாம என்னோட படிப்புக்கு ஏத்தமாறி ஒரு வேலைல சம்பாறிக்கனும்னு ஆச அதனால நான் பட்டணம் போறேனு சொன்ன ஆனா அப்பா ஒத்துக்கல.அதனால அவசரஅவசரமா எனக்கு கல்யாண ஏற்பாடு பன்னிட்டாரு. அதான் வீட்டுக்குத் தெரியாம இங்க வந்தேன். கண்டிப்பா அப்பாக்கு என்மேல கோபம் இருக்கும். ஆனா அவர் என்மேல வச்சிருக்கப் பாசத்துல கோபம் சீக்கிரம் போயிடும்.இப்பக் கூட என்னவிட்டு அவரால அங்க இருக்க முடியலனுதான் என்ன அவர் கூட கூப்டாரு. நான் தான் வரமாட்டேனு சொன்னேன்.ஆனா நீங்கப்பாட்டுக்கு என்னென்வோ சொன்னதுல அவர் உடைஞ்சிப் போயிட்டாரு....என அழுதபடியே எழுந்து நின்றவள்

நீங்க என்ன நினைச்சி அப்படி சொன்னிங்கனு தெரியல ஆனா என்னொட மனசுல அந்தமாதிரி எந்த எண்ணமும் இல்லை.எங்கப்பாவ கஷ்டப்படுத்துனதுக்கு
நான் உங்கள மன்னிக்வே மாட்டேன் என்னோட முகத்திலயே இனி முழிக்காதிங்க என அவ்விடத்தைவிட்டு நகர்ந்தாள்.

இதய திருடா Where stories live. Discover now