13

12.4K 342 21
                                    

சக்திக்கு ரேஷ்மாவின் மேல் எந்த சந்தேகமும் இல்லை. அவளின் திடீர் மாற்றம் அவனுக்கு சந்தோஷத்தைத் தந்தது.

ஆதிராவின் மனதின்  ஒரு ஓரத்தில் சக்தி ரேஷ்மாவை விரும்பி இருப்பானோ என்ற நெருடல் இருந்தது.ஆனால் அவளின் தாய் தந்தையின் நினைவு அதை மிஞ்சிட அதை அவள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை.

தன் முதல் மாத சம்பளத்தில் ஆதிரா தனக்கென ஸ்கூட்டியை வாங்கிக் கொண்டாள்.

இவ்வாறாக நாட்கள் மெல்ல நகர நான்கு மாதங்கள் முடிய ஜானகி வீடு வந்து சேர்ந்தார்.

"என்னம்மா இப்டி திடீர்னு வந்து நிக்கிற. சொல்லிருந்தா நான் ஏர்போட்ல வந்து கூட்டிட்டு வந்துருப்பேன்ல"..என்றவனை முறைத்தவர்...

"ம்ம்ம் உன் மொபைல் எங்கடா எத்தன டைம் உனக்கு கால் பன்றது ஸ்விட்ச் ஆஃப்னு வருது.அதான் உன்னலாம் எதிர்ப்பார்த்தா வேலைக்கு ஆகாதுனு நானே வந்துட்டேன் "...என ஜானகி சளித்துக் கொள்ள.

"மொபைல் ஸ்விட்ச் ஆப்னு வருதா.இரு நான் போய் பாக்கறேன் "...என தன் அறைக்குள் நுழைந்தவன் தன் மொபைலை பார்க்கச் சுவிட்ச் ஆப்பில் இருந்தது.சார்ஜ்15% என காட்ட அதை சார்ஜ் போட்டிருந்தான்.ஆனால் ஸ்விட்ச் போடில் ஸ்விட்ச் ஆன் செய்ய மறக்கவே மீதி இருந்த சார்ஜும் இறங்கி ஸ்விட்ச் ஆப் ஆனது.அதை கவனித்தவன் தலையில் அடித்துக்கொண்டான்.

அறையிலிருந்து வெளியே வந்தவன் சோபாவில் சோர்வாக அமர்ந்திருந்த தன் தாயிடம் ...

"ம்மா சாரிமா சார்ஜ் இல்லாம ஸ்விட்ச் ஆப் ஆகிடுச்சு"... என  மன்னிப்பு கேட்டவன்...

" நீ ரொம்ப டயர்டா இருக்க நான் காபி போட்டுக்கொண்டுவரேன் "...என கிட்சனில் நுழைந்தான்.

காபியை  குடுத்துவிட்டு தன் அன்னையின் மடியில் படுத்துக் கொள்ள ஜானகி மெல்ல அவன் தலையை வருடியபடி...

" சக்தி எப்படி டா இருக்கான் "...என வினவ.

"அவனுக்கென்னமா மேரேஜ் ஆகிடுச்சு சந்தோஷமா இருக்கான் "...என கண்களை மூடியபடி உளறி வைக்க...

இதய திருடா Where stories live. Discover now