32

9.9K 284 49
                                    

சந்திராவின் வற்புறுத்தலினால் ராஜனை வேறு மருத்துவமனைக்கு மாற்றியிருந்தனர்.

தன் தந்தையின் உடல் நிலை சரியாகும் வரையாவது அவருடன் இருக்கலாம் என்றிருந்தாள்.ஆனால் நிலமையோ தலைகீழாக மாறிப்போகியிருந்தது.

ஒரு புறம் அழுதவள் மறுபுறம் அவளது அத்தையை திட்டிக்கொண்டிருந்தாள்.தன் மீதுள்ள வெறுப்புக் குறையவில்லை என்றாலும் பரவாயில்லை ஆனால் தன் தந்தையின் உடல்நிலைக் குறித்து சற்றும் யோசிக்காமல் இவ்வாறு செய்தவரின் மீது கோபம் கோபமாக வந்தது.

சக்தியும் அந்த செவிலியரும் மாறி மாறி ஆறுதல் கூறியும் ஆதிராவின் அழுகை நின்றபாடில்லை.

அவளை வீட்டிற்குச் அழைத்துச் சென்றவன் அவளது தந்தை இருக்கும் மருத்துவமனை எதுவென தேடிக் கண்டுப்பிடிப்பது தன் பொருப்பு என உறுதியளித்தான்.

.
.
.
.
.
நேற்று வருண் நடந்துக்கொண்ட விதத்தில் அவன் மீது கோபம் இருந்தாலும் அவனை பொது இடத்தில் வைத்து அறைந்ததற்கு மதி வருந்தாமலில்லை.

அவளுக்கே ஆச்சரியம் தான் அவளா நேற்று வருணை அறைந்தது என.எங்கிருந்து இவ்வளவு தைரியம் வந்தது என அவள் அறியவில்லை.

பொதுவாக பெண்பிள்ளைகளுக்கு தந்தை என்றாளே தனி பாசம் தான்.அதனால் தான் தன் தந்தையின் முகவாடலை கண்டு பொருக்கமுடியாமல்  
மதி வருணை அறைந்திருக்கக் கூடும்.

தன் இருக்கையில் அமர்ந்தவள் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள்.

அவளை யாரேனும் கடந்துச் சென்றால் அது வருணாக இருக்கக் கூடும் என நிமிர்ந்து நிமிர்ந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது.இதுநாள்வரையில் மதியை பார்க்க வேண்டுமென்பதற்காக ஏதேனும் ஒரு சாக்கை வைத்துக் கொண்டு அந்த இடத்தையே சுற்றி சுற்றி வருபவன் இன்று வரவில்லை.

மதிய வேளையில் கேன்டினிற்குச் சென்றவளின் கண்கள் வருணைத் தான் தேடியது.

இதய திருடா Where stories live. Discover now