31

10K 291 44
                                    

வெளியே நின்றபடி சந்திரா ஆதிராவை கடிந்துக் கொண்டிருக்க, வசந்தி தன் கணவனின் நிலைக் குறித்து வருந்திக் கொண்டிருக்க, அறுவை சிகிச்சை அறையினுள் நுழைந்த ஆதிராவோ வெறும் பார்வையாளராகிப் போனால்.

அறுவை சிகிச்சை முடிந்தவுடன் மருத்துவர் வாசுதேவனிடம் தன் தந்தையின் நிலையைப் பற்றிக் கேட்டு அறிந்துக்கொண்டாள்.

அவர் சுயநினைவிற்கு (conscious) வருவது சாத்தியம் என்றாலும், அது எப்பொழுது என்று கூற முடியாது என்றும், அதற்கு ஒரு மணி நேரம்,ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் அல்லது பல வருடங்கள் ஆகலாம் என்றும் கூறியவர் தன்னால் முடிந்தவரையிலான ஆறுதல் வார்த்தைகளை தந்துவிட்டுச் சென்றார்.

அறுவை சிகிச்சை அறையிலிருந்து ராஜனை ஐசியு(ICU)விற்கு மாற்றினர்.

மயக்கநிலையிலிருந்தவரின் முன் மண்டியிட்டு அமர்ந்தவள் அவரது வலது கரத்தினை இறுகப் பற்றியபடி

சாரிபா.,,,நான் எந்தத் தப்பும் பன்னலபா.,.உங்க பொண்ணுப்பா நான்...நீங்க வேதனைபடற மாதிரி நான் நடந்துக்கமாட்டேன் பா.,.என் மேல உள்ள வெறுப்புல என்ன விட்டுட்டுப்  போயிடாதிங்கப்பா ப்ளீஸ் ...நீங்க எனக்கு வேணும்பா.,..நீங்க எனக்கு வேணும்பா.,,.ப்ளீஸ்.,,என்ன நீங்க ஏத்துக்கலனா கூட பரவாலபா.,.நான் தூரமா நின்னு உங்களப் பாத்துக்கிறேன்.,.ப்ளீஸ் பா ஒரு தடவ கண் முழிச்சி எங்கிட்ட பேசுங்கப்பா ப்ளீஸ் .,,.ப்ளீஸ் .,ப்ளீஸ்...என கதறி அழுது ஓய்ந்தவள் அவரது கரத்தின் மீது தன் தலையை சாய்த்துக் கொண்டாள்.

அவளது தோளின் மீது யாரோ கை வைக்க அதை உணர்ந்தவள் நிமிர்ந்துப் பார்க்க அங்கு சக்தி நின்றுக் கொண்டிருந்தான்.

அவனது கண்களும் கலங்கியிருந்தது.

சக்தி அப்பாவ கண்முழிக்கச் சொல்லு  ப்ளீஸ்....நான் சொன்னா  கேக்கமாட்றாரு.,நீயாச்சும் சொல்லு ப்ளீஸ்.,..என்றவளின் தோளைப் பற்றி நிற்கச் செய்தவன்

ஷ்,.,அழக் கூடாது. உன் அப்பாக்கு நீ அழுதா புடிக்காது என அவளது கண்ணீரைத் துடைத்து விட்டு .,,

இதய திருடா Where stories live. Discover now