8

12.2K 357 38
                                    

ஆட்டோ சக்தியின் வீட்டின் முன் நின்றது.

சக்தி இறங்கியப்பின்னும் ஆதிரா இறங்கவில்லை.   திரும்பி ஆதிராவைத் தேட அவளோ ஆட்டோவினுள் பித்துப்பிடித்தாற்ப் போல் அமர்ந்திருந்தாள். 
ஆதிரா ஆதிரா என்று அழைக்க அவளிடம் ஒரு அசைவும் இல்லை  பெருமூச்சொன்றை வெளியேற்றி பின் அவள் கரம் பற்றி வீட்டினுள் அழைத்துச் சென்றான்.

ஆதிரா மெத்தையின் மீது அமர்ந்திருக்க சக்தி சோபாவில் தலையை கையில் தாங்கியபடி அமர்ந்திருந்தான்.

அதுவரை ஜன்னலை வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருந்தவள் வெடித்து கதறி அழ ஆரம்பித்தாள் சக்திக்கோ என்ன செய்வது என்ன சொல்லி சமாதானம் செய்வது என்று புரியவில்லை. அவளுக்கு சிறிது நேரம் தனிமை கொடுக்கவிரும்பி அறையை விட்டு வெளியேறியவன் வருணிற்கு கால் செய்தான்.

"ஹலோ.,.. வருண் கொஞ்சம் வீட்டுக்கு வரியா"..,

"என்ன சார் பிரண்ட பாத்தாச்சா யாரு ஒரு வேள கேர்ள் பிரண்டா".,.

ப்ச்...வீட்டுக்கு வரமுடியுமா முடியாதா...என சக்தி கத்தவும்

"கத்தாதடா வரேன்"...என்றவன் அங்கிருந்து புறப்பட்டான்.

.
.
.
..
சிறிது நேரம் கழித்து  வீட்டினுள் நுழைந்த வருண் வழக்கம்போல் சக்தியை வெறுப்பேற்ற துவங்கினான்.

"என்ன மச்சி வெளிய லேடீஸ் ஸ்லிப்பர் கெடக்கு கேர்ள் பிரண்ட வீட்டுக்கே கூட்டிட்டு வந்துட்டியா அப்போ அவங்க எனக்கு அண்ணி எங்க உன் ரூம்ல இருக்காங்களா நான் போய் என்ன இன்ட்ரோ பன்னிக்கிறேன் "...என சக்தியை பேச விடாமல் தன்பாக்கில் பேசிக்கொண்டு அறையினுள் நுழைய முற்பட்டவனை சக்தி காலரைப்பிடித்து வெளியே இழுத்துச்சென்றான்.

"டேய் என்னடா பன்ற விடு என்ன"..

"ப்ளீஸ்டா நான் சொல்றத  கொஞ்சமாவது காது குடுத்துக் கேளு"...

"முடியாது நானே போய் இன்ட்ரோ ஆரேன்"...

"ம்ச் இருடா. நீ சொல்ற மாறி  உள்ள ஒரு பொண்ணு இருக்கா ஆன அவ என் கேர்ள் பிரண்டு இல்ல"...

"அப்றம் யாரு?...என்றெவன் சட்டென சக்தியின் காலரைப் பிடித்து "சக்தி நீயேன்டா இப்படி மாறுன.உன்ன என் பிரண்டுனு சொல்லிக்கவே அசிங்கமா இருக்குடா"...என்றவனின் முகம் கோவத்தில் சிவந்திருந்தது.

வருண் என்ன நினைத்துப் பேசுகிறான் என புரிந்துக் கொண்டவன் பதறியபடி
"டேய் சீ ...அவ எ....என்.,என்னோட வைஃப்டா"...என்றான்.

"ஞே "என விழித்தவன்
"என்ன! வைஃப்பா என்னடா சொல்ற?"...

"ஆமா வைஃப் தான்"... என சக்தி ஒற்றை பதிலைத்தர.

"அடப்பாவி இதுக்குதான் எங்ககிட்ட மேரேஜ் வேண்டா வேண்டானு சீன் போட்டியா".,.

"நீ வேற ஏன்டா"... என அலுத்துக் கொண்டவன் நடந்த அனைத்தையும் கூறினான்.

"இப்படியா ஒருத்தன கண்மூடித்தனமா நம்புவ. அதவிடு அட்லீஸ்ட் எங்கிட்டையாவது சொல்லிருக்கலாம்ல",.

"இல்லடா அவனுக்குக் கொஞ்சம் பணத்திமிரு மத்தபடி நல்லவன்தான்டா  காலேஜ் ஒரு பொண்ணக்கூட ஏறெடுத்துப்பாக்க மாட்டான் திடீர்னு கால் பன்னி நான் லவ் பன்றேன் எங்கள சேத்துவைனு சொன்னோன நம்பிட்டேன் பட் இப்டி நம்பவச்சி கழுத்தருப்பானு சத்தியமா தெரியாதுடா".,என்றவன் மேலும்,..

"எனக்கு அங்க என்ன பன்றது. எப்படி இந்த ப்ராப்ளத்த  சால்வ் பன்றதுனு தெரியல.அவங்க ரொம்ப பாவம்டா
என்னால தான எல்லாம்"... 

"விடுடா பீல் பன்னாத எல்லாம் சரியாகிடும்.  சரி அவங்க என்னப் பன்றாங்க"...

"இன்னும் அழுதுட்டு தான் இருக்காங்க. அவங்க அத்தை தப்புத் தப்பா பேசறாங்க.காதுலையே வாங்க முடியல.உடம்பெல்லாம் கூசுச்சு.எனக்கே இப்படினா அந்த பொண்ணு என்னப் பாடுபட்டுருப்பா.இதுல நான் வேற அவங்க கிட்ட கேக்காம கூட தாளியகட்டி கூட்டிட்டு வந்துட்டேன்" ...என வருந்தியவனை தோள் தொட்டு சமாதானப்படுத்தினான் அவன் நண்பன் .

"அந்தப் பொண்ண என்னோட வச்சி தப்பா பேசவும் எனக்கென்ன பன்றதுனு தெரியல அதான் "...என்றவனை இடைமறித்தவன் ...

"நீ எடுத்த முடிவுல எந்தத் தப்பும் இல்லடா.போட்டு குழப்பிக்காத.நடந்தத பத்தி பேசாம .இனிமே என்னப் பன்னலாம்னு யோசிக்கலாம் "...என்றான்.

வருணிற்கோ ஆதிராவை நினைத்து வருத்தப்படுவதா இல்லை தன் நண்பனிற்க்கு நல்ல வாழ்க்கை அமைந்துவிட்டது என சந்தோஷப்படுவதா என்று தெரியவில்லை.

இதய திருடா Where stories live. Discover now