30

10.7K 312 34
                                    

இன்னக்கி எனக்கு கேஷுவால்டில டியூட்டி,...

அப்போ ஒரு ஆக்ஸிடன்ட் கேஸ் வந்ததுனு நான் பர்ஸ்ட் எய்ட் பன்னப் போன அப்ப,...அப்ப,...என திணறியவள் தன் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழத்தொடங்கினாள்.

ஆதிரா அழறா அதனால நானே சொல்றேன்.

முதலுதவி செய்ய வந்தவள் அந்த ஸ்டிச்சரில் இருந்தவரை பார்த்து திகைத்தபடி நின்றிருந்தாள்.

அவளது தந்தையின் முகத்தின் ஒரு பாதியும் அவரது ஆடையும் இரத்தத்தினால் மறைந்திருத்தது.
இரத்தம் அதிகம் வெளியேறியதால் அவரது உடல் வெளுத்திருந்தது.

உடல் நடுங்க நின்றிருந்தவளை அருகிலிருந்த செவிலியரின் குரல் நடப்பிற்குக் கொண்டுவர

ஒவ்வொரு நொடிகளையும் வீணடிக்காமல் கை நடுக்கத்துடன் தன் மருத்துவப் பணியை தொடங்கினாள்.

விஷயம் தெரிந்து ஆதிராவின் அன்னை வசந்தியும் அத்தை சந்திராவும் அங்கு வந்துச் சேர்ந்தனர்.

அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக ராஜனை ஆப்ரேஷன் தியேட்டருக்கு மாற்றுவதற்காக ஆதிரா வெளியே வரும் போது தான் அவளது அன்னையையும் அத்தையையும் கவனித்தாள்.

வசந்தி சுவரில் சாய்ந்தபடி அழுதுக் கொண்டிருக்க அழுதபடியே அவர் அருகில் சென்றவள் அவரை இருக்க அனைத்துக் கொண்டாள்.

அவள் அனைத்த அடுத்த நொடி ஆதிராவை பிடித்துத் தள்ளியவர்

சீ,,என்ன தொடாத .,.அவருக்கு மட்டும் எதாவது ஆச்சி உன்ன சும்மா விடமாட்டேன் என்றவர் மேல எதுவும் பேசாமல் கீழே அமர்ந்தபடி அழத்தொடங்கினார்.

சண்டாலி உன்னோட பேச்ச எடுத்தான் இன்னக்கி காலைல சொல்ல சொல்ல கேக்காம.அப்பயே என்னொட மனசு சொல்லுச்சு எதோ தப்பா நடக்கப் போவுதுனு.ஏன்டி அங்க இருக்கும் போதும் என் தம்பியோட நிம்மதிய கெடுத்த இப்பையும் உனக்கு என்னடி கேடு. அவன் மேல உன்னோட நிழல் கூட படக்கூடாது .அவனுக்கு ட்ரீட்மென்ட் பன்னும்போது நீ கூட இருந்தா அவன் எப்படி புழைப்பான்.நீ உள்ள போக்கூடாது.அப்படி நீ போகற மாதிரி இருந்தா இந்த ஹாஸ்பிட்டல் வேணா. நாங்க வேற ஹாஸ்பிட்டல் பாத்துக்குறொம்.

இதய திருடா जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें