33

10.5K 302 29
                                    

சக்தி விடிந்ததும் தன் தேடலை தொடங்கினான்.

வருணிடமிருந்து கால் வர.,,அட்டன் செய்தவன்.

டேய் வருண் சொல்லாம எங்கடா போன. சொல்லிட்டுப் போறதுக்கு என்ன உனக்கு. அம்மா பயந்து போயி இருக்காங்க.

சாரிடா.,... ஒரு அவசர வேல அதான்.நான் இப்போ வீட்டுக்குத் தான் போயிட்ருக்கேன் .

சரி ஆபிஸ் விஷயமாதான் போரேனு ஏன்டா அம்மாக்கிட்ட பொய் சொன்ன.

அது.,..நான் வீட்டுக்குப் போயிட்டு வந்தரேன் அப்றம் நேரா வந்து என்னனு சொல்ரேன்டா.

ம்ம்ம்.,.சரிடா.

நீ ஆபிஸ்ல தான இருக்க நான் நேரா அங்க வந்தரவா.

இல்லடா நான் ஆபிஸ் போல. நான் வெளிய இருக்கேன்.

சக்தியின் குரல் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தவன்.

ஏன்டா எதாவது பிராப்ளமா.ஏன் ஆபிஸ் போல.

நீ நேர்ல வாடா நான் சொல்றேன் என்றவனின் குரல் தேய்ந்துப் போனது.

வருணிற்கு ஏதோ தவறாகப்பட வீட்டிற்குச் செல்லாமல் சக்தி இருக்குமிடத்தைக் கேட்டு அறிந்துக் கொண்டு அங்கு விரைந்தான்.

சக்தி விலாஸ் மருத்துவமனைக்கு அருகிலுள்ள பார்க்கில் அமர்ந்திருந்தான்.

அவனருகில் வந்து அமரந்த வருண்.

போன்ல உன்னோட வாய்ஸ் சரியில்ல என்ன பிரச்சன சொல்லு என்றவனிடம் நடந்தவற்றைக் கூறியவன்.

நேத்து இங்க பக்கத்துல இருக்குற ஹாஸ்பிட்டலலாம் விசாரிச்சுப் பாத்துட்டேன் டா அவர எங்க அட்மிட் பன்னிருக்காங்கனு தெரியல.ஆதிரா இரண்டு நாளா ஒழுங்கா சாப்டல அழுதுட்டே இருக்கா. என்னால அவள அப்படி பாக்க முடியலடா என்றவனின் கண்ணிலிருந்த வலியை உணர்ந்தவனாய்

சாரி மச்சான் நான் நேத்து உன் கூட இருந்துருக்கனும் தப்பு பன்னிட்டேன்.சரி விடு இன்னக்கி கண்டிப்பா கண்டுபிடிச்சரலாம் என்றவன் சக்தியை அழைத்துக் கொண்டு பூங்காவைவிட்டு வெளியேறினான்.

இதய திருடா Where stories live. Discover now