22

10.7K 314 19
                                    

காரிலிருந்து இறங்கியவன் நேராக மதியழகியின் முன் சென்று நின்றான்.

வருண் வந்து நின்றதும் இரண்டடி தள்ளி நின்றுக்கொண்டான்அந்த கயவன்.அவனை எரித்துவிடுவதைப் போல் முறைத்தவன் பின் மதியழகியின் மீது பார்வையை செலுத்தினான்.

பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் அவளது கண்களைப் பார்க்க பார்க்க வருணிற்கு ஏதோ மாதிரியாக இருந்தது.

வந்து வண்டில ஏறு. நான் உன்ன ட்ராப் பன்னிரேன்.என்றான் கட்டளையாக.

அவளும் எதிர்ப்பார்த்தது இதைத் தான் என்றாலும் உடனே ஒப்புக் கொண்டால் தவறாக எண்ணி விடுவானோ என தயங்கியபடி.,.,இல்லைங்க பரவால நான் பஸ்லயே போய்க்கிறேன்.

சரி நீ பஸ்லயே போ நான் கிளம்புறேன் என அடுத்த நொடி காருக்குள் ஏறி அமர்ந்துக் கொண்டான்.

மறுத்தால் மீண்டும் பேசி சம்மதிக்கவைத்து காரில் ஏற்றிக் கொள்வான் என நினைத்தவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மீண்டும் பயம் தொற்றிக்கொள்ள கண்கள் கலங்கத் தொடங்கியது.பீறிட்டு வந்த அழுகையை நமட்டைக் கடித்துக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

காரினுள் ஏறியவன் காரை எடுக்காமல் கதவை திறந்து வைத்துவிட்டு அவளுக்காக காத்திருந்தான்.

குனிந்தபடி அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தவள் நிமிர்ந்துப் பார்க்க அங்கு வருண் காரை எடுக்காமல் காத்துக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

சற்றும் தாமதிக்காமல் விரு விருவென காரில் ஏறி அமர்ந்துக்கொண்டாள்.

தலையை ஆட்டிக் கொண்டே சிறுப் புன்னகையுடன் வண்டியை எடுத்தான்.

குனிந்தபடி கையை பிசைந்துக்
கொண்டிருந்தாள்.
சற்று நேரம் மௌனம் ஆட்சி செய்ய அதை கலைக்கும் விதமாக

எதுக்கு இப்படி யாரப் பாத்தாலும் பயப்பட்ற.,,..

அவன் கேட்டதுதான் தாமதம் டேம் உடைந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதய திருடா Where stories live. Discover now