18

12K 314 46
                                    

சக்தி "ஆதிரா"... என்றழைக்க .,,,அவளோ அவன் புறம் திரும்பாமலே துணி மடித்து வைத்தபடி.

"என்ன சக்தி நான் மறுபடியும் லிமிட்ட கிராஸ் பன்னிட்டேனா ..,. என்னனு சொன்னா இனிமே கிராஸ் பன்ன மாட்டேன்."...என்றாள் .

அவள் கூறிய வார்த்தைகளில் தான் அன்று அவன் அவ்வாறு பேசியதில் எந்த அளவுக்கு வருந்தியிருப்பாள் எனப் புரிந்தது.

"ஆதிரா..,ப்ளீஸ் நான் எதையும் மனசுலருந்து அத சொல்லல"... என்றான் நிஜமாகவே வருந்தியபடி.

அவன் புறம் திரும்பி இதழை சுழித்து விரக்தியான சிரிப்பொன்றை சிரித்தவள்.

"நான் எல்லாத்துக்கும் பாரமா தான் இருக்கேன் சக்தி"... என்றாள் ,,,வாழ்வின் வெறுமையை வார்த்தைகளுள் அடக்கியபடி.

அவள் பாரம் என்ற வார்த்தையை உச்சரித்ததும் சக்திக்கு ஒரு மாதிரியாக இருந்தது.

"ஏன் ஆதிரா இப்படிலாம் பேசற. நா,.,நான் என்னைக்குமே உன்ன பாரமா நினைச்சது இல்ல.உனக்கு ஒன்னு தெரியுமா. என் அம்மா போனப்றம் இந்த வீட்ல நான் மட்டும் தான் தனியா இருப்பேன் அப்படியே பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கும். நீ வந்தப்றம் தான் எல்லாமே மாறுச்சு"... என தடுமாறிய படி கூறியவன் பின் அவனே தொடர்ந்தான்.

"நான் அன்னக்கி உங்கிட்ட அப்படி கோவமா பேசுனது தப்புதான்.ஆனா நான் வேணும்னு கோபப்படல.அம்மா தொட்டு வச்சதெல்லாம் அப்படியே இருக்கட்டும்னு தான் நான் ரூம்ம பூ.,,பூட்டி வச்சிருந்தேன் ஆனா நீ "...என மேலும் மேசமுடியாமல் தடுமாறியவன். தலையை தாங்கியபடி பெட்டில் அமர்ந்தான்.

அதுவரை அமைதியாக அவன் பேசுவதையே உண்ணிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவள் அவன் இறுதியாக சொன்னதை கேட்டவுடன் " கடவுளே எவ்வளவு பெரிய தப்பு பன்னிற்கேன்.அவன் அம்மா நினைவா வச்சிருந்தத போய் ச"...என தன்னைத்தானே நொந்துக்கொண்டாள்.

சக்தி அங்கு அவ்வாறு அமர்ந்திருப்பதை பார்க்க பார்க்க தன் மீது வெறுப்புதான் கூடியது.

இதய திருடா Where stories live. Discover now