26

10.9K 300 28
                                    

இரண்டு நாட்கள் அங்கு தங்குவதற்கு தேவையானதை தன் பையில் அடுக்கி வைத்தவள் சக்தியின் வருகைக்காக காத்திருந்தாள்.

இன்னும் இரண்டு நாட்களில் பாரதிக்குத் திருமணம். அதற்குத் தான் ஆதிரா கிளம்பிக் கொண்டிருந்தாள்.

சக்திக்குத் தான் இந்த எட்டு நாட்களும் சோகத்திலே கழிந்தது ஆதிரா திருமணத்திற்கு தன்னையும் வருமாறு ஒரு முறைக் கூட கேட்கவில்லை என.அதே சோகத்திலே வீடு வந்துச் சேர்ந்தான்.

ஹாலில் உள்ள சோபாவில் ஒரு டிராவல் பேக் இருந்தது.அதைப் பார்த்தவுடன் சக்தியின் முகம் சுருங்கிப் போனது.

சுருங்கிய முகத்துடன் கிட்சனுள் எட்டிப் பார்க்க ஆதிரா அங்கு இல்லை. ஏமாற்றத்துடன் தன் அறையினுள் நுழைய ஆதிரா தலையை துவட்டிய வண்ணம் வாஷ் ரூமிலிருந்து வெளியே வந்தாள்.

சக்தி உள்ளே வருவதை கவனித்தவள்

வந்துட்டியா சக்தி .இரு நான் காபி எடுத்துட்டு வரேன் என்று கிளம்பிவளிடம்

இல்ல வேண்டா எனக்கு தலை வலிக்குது. நான் அப்பறமா போட்டுக் குடிச்சிக்கிறேன் என சோபாவில் தலை சாய்த்தபடி அமர்ந்துக் கொண்டான்.ஏனோ அவன் மனம் பாரமாக இருப்பதை உணர்ந்தான்.

அவனுக்கு பதிலேதும் கூறாமல் ஆதிரா அறையை விட்டு வெளியேறினாள்.

கண்மூடி அமர்ந்திருந்தவனின் அருகில் யாரோ அமர்வதைப் போல் உணர்ந்தவன் கண்ணைத் திறந்து தலையைத் திருப்ப அங்கு ஆதிரா காபி கப்புடன் அமர்ந்திருந்தாள்.

பர்ஸ்ட் இந்த காபிய குடி அப்பையும் தலை வலி சரி ஆகலனா நான் டேப்லட் தரேன் அத போட்டுக்கோ என்றவள் அவன் நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்துத் தொட்டுப் பார்த்து ஜுரம் அடிக்கவில்லை என்பதை உறுதிப் படுத்திக் கொண்டாள்.

எழுந்துக் கிளம்பாமல் தன்னருகிலேயே தயக்கத்துடன் அமர்ந்திருப்பவளை கவனித்தவன்.

என்னாச்சுக் கிளம்பலையா???

ஹாங்.,..கிளம்பனும் சக்தி. சிக்ஸ் தர்ட்டிக்குத் தான் டிரெயின் இன்னும் டைம் இருக்கு என்றாள்.

இதய திருடா Where stories live. Discover now