4

14K 335 25
                                    

மறுநாள் காலை ....,

ஹலோ ..... வருண் நான் இன்னக்கி ஆபிஸ்க்கு  வரலடா லீவ் சொல்லிடு,.,

ஆபிஸ்க்கு வராம சாருக்கு என்ன வேலை,..

பிரண்ட பார்க்கப் போறேன்.

எனக்கு தெரியாம யாருடா அந்த பிரண்டு...  கேள் பிரண்டா,..

ம்ச் காலேஜ் பிரண்டு டா உனக்கு தெரியாது.

ம்ம்ம் ஓகேடா பாய்,..

10AM...ரெஸ்ட்டாரண்டில்.

வா மதன் என்ன பிரச்சனை. ஏன் நேத்து ஒரு மாதிரி பேசுன.

அது எனக்கு எப்படி சொல்றதுனு தெரியல சக்தி அது,..
நான் ஒரு பொண்ண விரும்புறேன் அவளும் தான்.,

நல்ல விஷயம் தானடா,..

ஆனா நாளை மறுநாள்  அவளுக்கு கல்யாணம்.அவ வீட்ல என் லவ் மேட்டர் தெரிஞ்சி போச்சி அதான் திடீர்னு முடிவு பன்னிட்டாங்க. நீதான் எங்க ரெண்டு பேரையும் சேத்து வைக்கனும்...என தன் நண்பனின் உதவும் குணம் அறிந்து  பிரச்சனையை  மொழிந்தான் ...

சரிடா இப்ப நான் என்ன பன்னனும்னு சொல்லு...

நீ அவள கடத்தனும்...

ஏன்டா அவங்களும் உன்னை விரும்புறாங்க தான அப்றம் ஏன்டா கடத்த சொல்ற...

அவளும் என்ன உயிரா நேசிக்கிறாடா. என்ன ஒன்னு
அவ கொஞ்சம் பயந்த சுபாவம் பயப்பட்றா சொன்னா கேக்கமாட்றா. என்னால அவ இல்லாம வாழ முடியாது டா.அவ இல்லனா நான் செத்துருவேன். ப்ளீஸ் டா...

ம்ம்ம்.,. ஹெல்ப் பன்றேன்..பட் நீ கடத்த சொல்றியே அதான் எப்படினு.,என யோசித்தவனை...

நான் எங்க அப்பாவோட ஆளுங்கள வச்சே முடிச்சிடுவேன். அவர பத்தி தா உனக்கு தெரியுமே. அவர் இதுக்கெல்லாம் ஒத்துக்கமாட்டாரு. நீ இப்பவே எங்கூடவா எங்க எப்போ என்ன பன்னனும்னு சொல்றேன்...

ம்ம்ம் ஓகேடா டீட்லைஸ் குடு பன்னிரலாம்...

.
.
.
.
.
.
.
.

ஆதிரா நம்ம கதையோட ஹீரோயின் கண்ணப்பறிக்கும் அழகு.அவங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு.
  எம் பி பி எஸ் முடிச்சி ஆறு மாதம் ஆகுது.ஹாஸ்பிட்டலில் வொர்க் பன்றா.. இவளோட உயிர் தோழினா அது பாரதி தான்.

ஆதிராவின் இல்லம்.

அம்மா நான் ரெயில்வே ஸ்டேஷன்க்கு போய் பாரதிய பிக்கப் பன்னிட்டு வரேன்...என ஸ்கூட்டு கீயை கையில் சுத்திக் கொண்டு வந்தவளிடம்....

என்னடி விளையாட்றியா நாளைக்கி உனக்கு கல்யாணம் நீ என்னடானா வெளியபோறேனு சொல்ற அடங்கி வீட்ல இரு நைட் மண்டபத்துக்கு போகனும், என்றார் கண்டிக்கும் விதமாக அவளின் அன்னை வசந்தி.

அம்மா ப்ளீஸ் மா புரிஞ்சிக்கோ அவளுக்கு இந்த ஊர் புதுசு. நா பத்தரமா போய்ட்டு பத்தரமா வந்தறேன். ப்ளீஸ் மா ப்ளீஸ்,..

புரியாம பேசதடி. முதல்ல ரூமுல போய் ரெஸ்ட்.,..

அம்மா ப்ளீஸ் ப்ளீஸ்.,..என தன அன்னையின் கண்ணம் கிள்ளி கேட்டவளின் தலையை வாஞ்சையாக தடவியவர்...

சரிடி ஆனா பாத்து பத்தரமா  போய்ட்டு வரனும் சரியா,.

தேங்ஸ் மா என்று அவர் கனன்னத்தில் முத்தமிட்டு ஸ்கூட்டியில் பறந்தாள்...

இவ இப்டியே சந்தோஷமா இருக்கனும் கடவுளே ,என வேண்டிக்கொண்டார் தன் மகளிற்க்கு நடக்கவிருக்கும் விபரீதம் அறியாமல்.

இதய திருடா Where stories live. Discover now