24

11.3K 310 29
                                    

என்ன பார்க்கனும்னு உனக்கு இப்பதான் தோனுச்சா என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.

ஹேய் லூசு நான் தான் சொன்னல டியூட்டடினு.டைம் இல்ல. நானே லேட் நைட் தான் வீட்டுக்குப் போறேன்.

போ நான் ஒத்துக்கமாட்டேன்.இப்போ மட்டும் எப்படி டைம் கிடைச்சதாம் என்றாள் செல்லமாக கோபித்தபடி.

அடியே நான் வேலைய ரிசைன் பன்னிட்டேன்.

ஏன்டி.

ம்ம்ம்,..சொல்றேன்.அதுக்கு முன்னாடி நீ என்ன உள்ள விடு இப்படி வீட்டுவாசல்ல வச்சி ஏன் இன்வஸ்டிகேட் பன்னிட்டு இருக்க.

ஸ்ஸ்ஸ்,........சாரி பாரதி உன்ன பார்த்த சந்தோஷத்துல இத மறந்துட்டேன் என அவளை உள்ளே அழைத்து சோபாவில் அமரச் சொல்லிவிட்டு ஜூஸ் எடுத்து வந்தாள்.

பாரதி ஜூஸைக் குடித்தபடியே சரி சொல்லு நீ எப்படி இருக்க.வொர்க்லாம் எப்படி போய்ட்டு இருக்கு.

நான் நல்லாதான் இருக்கேனு சொல்றளவுக்கு என் லைப்ல நல்லதா எதுவும் நடக்கல என்றாள் வேறெங்கோ பார்த்தபடி.

டம்ளரை கீழே வைத்துவிட்டு அவளிடம் நெருங்கி அமர்ந்தவள் கைகளை பற்றியபடி

இங்க பாரு ஆதிரா லைப்னா பிராப்லம் வரத்தான் செய்யும்.நீ நடந்ததையே நினைச்சிட்டு இருக்காத.. எதோ ஒரு காரணத்துக்காக கடவுள் உன்ன இங்க கொண்டுவந்து சேர்த்திருக்காரு.எல்லாம் நல்லதுக்குனு நினைச்சிக்கோ.

தப்பே பன்னாம தண்டனை அனுபவிக்கிறேன்டி.ரொம்ப கொடுமையா இருக்கு. நான் அப்பா அம்மா நியாபகம் வந்து அழாத நாளில்ல.இத எதையும் சக்திக்கிட்ட காமிச்சிக்கிறது இல்ல என பாரதியின் தோளில் சாய்ந்து அழத்தொடங்கினாள்.

அவளை கொஞ்ச நேரம் அழவிட்டாள்.

அவள் முகத்தை நிமிர்த்தி கண்ணீரை துடைத்துவிட்டு
இனி அழாத ஆதிரா எல்லாம் சரி ஆகிடும் எனக்கு நம்பிக்கை இருக்கு என்றவள் அவள் கவனத்தை திசை திருப்புவதற்காக

நீ மட்டும் தான் இருக்க அவங்கள காணோம்.

யாரு சக்திய கேக்றியா அவன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான்.

இதய திருடா Where stories live. Discover now