20

11.6K 319 44
                                    

முகத்தில் விழும் முடியை காதோரம் இழுத்த்துவிட அவள் கை தீண்டளின் குஷியில் காதில் அணிந்திருந்த ஜிமிக்கி ஆட்டம் போட இமைகள் இரண்டும் வண்ணத்துப்பூச்சி விரித்து மடக்கும் இறகுப் போல் சிமிட்டிட உதடுச்சாயம் இல்லாமலே கோவப்பழம் போல் சிவந்திருக்கும் இதழைக் கடித்தபடி ஒரு பைலை தன் நெஞ்சோடு அனைத்துக் கொண்டு வருணின் அனுமதிக்காக நின்றிருந்தாள்.

அவனிடமிருந்து எந்த பதிலும் வராததால்.

!சார் ஐயம் மதியழகி "...என்றாள்.

அதற்கும் வருணிடமிருந்து பதில் இல்லை.

குழம்பியவள் மீண்டும் உரக்க "சார் "...என்றழைக்க வருண் அப்போது தான் பூலோலகத்தில் காலடி எடுத்து வைத்தான்.

இமைக்க மறுத்த இமையை இமையை இமைக்கச் செய்து பின் "என்ன "...என்பது போல் ஒற்றைப் புருவத்தை உயர்த்தினான்.

"இவர் என்ன கனவுக் கண்டுட்டு இருக்காரா"... என மனதில் நினைத்துக் கொண்டவள்.

"சார் ஐயம் மதியழகி "...என்றாள் மீண்டும்.

"ஆஹா பெயருக்கேற்ற" அழகு என மீண்டும் அவள் அழகை வர்ணிக்கச் சென்ற மூளையை தட்டி அடக்கினான்.

"என்ன ஆச்சுடா உனக்கு. எத்தன அழகான பொண்ண உன் லைப்ல பார்த்திருப்ப. ஆனா இவள பார்த்து மட்டும் ஏன்டா ஃரீஸ் ஆகிட்ட. சம் திங் ராங் டா."... என அவளுக்கு கேட்காதக் குரலில் முனு முனுத்தான்.

"குட் .......ஐயம் வருண் கம்மின் டேக் யுவர் சீட் "..என்றான்.

அவள் அவனுக்கு எதிரே உள்ள நாற்காளியில் அமர்ந்தாள்.அவள் ஒரு வித நடுக்கத்துடன் அமர்வதை அவன் கவனிக்காமல் இல்லை.
புது இடம் புது நபர் அப்படித்தான் இருக்கும் என விட்டுவிட்டான்.

சில விதிமுறைகளை அவளிடம் கூறியவன் அதன் பின் பயிற்சியைத் துவங்கினான்.

விவரிக்கும்
ஒவ்வொரு முறையும் சிஸ்டத்தைப் பார்த்துவிட்டு அவளைப் பார்க்கும் போது சற்றுத் தடுமாறிப் போனான்.

இதய திருடா Where stories live. Discover now