6

13.1K 332 43
                                    

ஆதிராவை எங்கு தேடியும் கிடைக்காத விரக்தியில் நாள்வரும் வீடு வந்து சேர்ந்தனர்.
தான் பெற்ற மகள் எங்கு இருப்பாள் அவளுக்கு என்ன ஆனது என துடிக்கும் இரு இதயங்கள் ஒரு மூலையில் அமர்ந்திருக்க தன் உயிர் தோழி் நிலை என்னவோ என பதறியபடி பாரதி ஒரு மூலையில் அமர்ந்திருக்க  ,இந்நிலையிலும்ஆதராவின்
மேல் தவறான  எண்ணோட்டங்களை படரவிட்டபடி சந்திரா ஒரு மூலையிலும் அமர்ந்திருக்க. அந்த வீடே கலையிழந்து கிடந்தது.
.
.
.
.
.
மயக்கம் தெளிந்து சுற்றும் முற்றும் நோட்டமிட்டவள் தான்  ஓர் அறையினுள் இருப்பதை உணர்ந்தாள்.

நான் எப்படி இங்க.... நான் நான் பாரதிய பிக்கப் பன்ன கிளம்புனே அப்றம்,.,..

ஆதிரா வீட்டை விட்டு கிளம்பியபின் ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில வண்டி சென்று கொண்டிருக்க ஆதிரா என தன் பெயரை யாரோ அழைப்பதை  கேட்டவள் சட்டன் பிரேக் அடித்து வண்டியை நிறுத்தி  திரும்பி பார்க்க அங்கு ஒருவன் ஆதிராவை  நோக்கி வந்து  கொண்டிருந்தான். பார்ப்பதற்கு அவன் டீசன்ட்டாக, படித்தவன் போல்  இருந்தாலும்  ஒரு வித பயம் அவள் மனதில் இருக்கத்தான் செய்தது.

எஸ்  நான் தான் ஆதிரா நீங்..,... என பேசி முடிப்பதற்குள் அவன் கையிலிருந்த  கைக்குட்டை அவளின் நாசியை மூடியிருந்தது.
அடத்த நொடி மயங்கியவளை காரில் கிடத்தி விட்டு காரில் விரைந்தான்.

பொட்டில் அடித்தார் போல் அனைத்தும் விளங்கியது . தான் கடத்தப்பட்டிருப்பதை உணர்ந்தவள் அடுத்தநொடி அந்த அறைக்கதவினை திறக்க முயன்றால். ஆனால் வெளிப்புறம் பூட்டப்பட்டிருந்தது.

"ப்ளீஸ் யாராவது இருந்தா கதவ திறங்க என்ன விட்டு்ருங்க நாளைக்கு எனக்கு கல்யாணம் நா போகனும் ப்ளீஸ் என்ன எங்க வீட்ல தேடுவாங்க..,திறங்க".,, என கதவு உடையும் அளவிற்கு தட்டியவள் கதவு திறக்கப்படவில்லை என்றவுடன் கதவின் மீதே சரிந்து அமர்ந்தபடி அழத்தொடங்கினாள்.

இதை அனைத்தையும் வெளியில் நின்று கேட்டுக்கொண்டிருந்தவன் மனம் கேட்காமல் மதனிற்கு கால் செய்தான்.

இதய திருடா Where stories live. Discover now