15

12.1K 344 39
                                    

அந்த   அறையில் உள்ளப் பொருட்களை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தூசிப் படிந்திருந்தது.
மூலைக்கு மூலை சிலந்தி வலை பின்னப்பட்டிருந்தது.

டேபுளின் மேல் நிறைய நாவல்கள் அடுக்கியபடி இருந்தது.ஒரு சிறிய பீரோ இருந்தது.அருகில் கட்டில் அதில் பழைய புடவை ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. அறையின் தரையில் தூசிப் படிந்தமையால் சக்தி வந்து போனதற்கான கால்தடம் இருந்தது.

அந்த அறையையே சுற்றும் முற்றும் பார்த்தவளின் கண்ணில் ஒன்று பட அதை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நம் நாயகி ஆதிரா.

வேறொன்றும் இல்லை சுவரில் மாட்டப்பட்டிருந்த போட்டோவை தான் பார்த்தாள்.அதில் போதிய உயரம் வசீகரமான முகம் கள்ளம்கபடம் இல்லா சிரிப்பு இவை அனைத்தையும் பெற்ற ஒரு பெண் சுமார் நாற்பது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க பெண் இருந்தார்.அவர் தோளின் மேல் கைப்போட்டு சிரித்தபடி நின்றுக்கொண்டிருந்தான் நம் சக்தி. இது வரை சக்தியின் முகத்தில் கண்டிராத சிரிப்பும் பாவனையும் அவன் முகத்தில் தெரிந்தது.

ஆம் அவர் சக்தியின் அம்மா செல்வி. அதை ஆதிரா யூகிக்காமல் இல்லை.

தன்னையும் அறியாமல் ஆதிராவின் கரம் அந்த போட்டோவை வருடியது.
அப்போது ஒரு காகிதம் அவள் காலடியில் விழ அதை எடுத்துப் முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள் கடிதம் போல் தெரியவும் அதில் என்ன எழுதியிருக்கும் என்ற ஆர்வத்தில் பிரித்துப் பார்க்க அதில் என் அன்புள்ள மறுமகளுக்கு என துவங்கப்பட்டிருந்தது.
சட்டென கடிதத்தை மடித்தவள்    " அன்புள்ள மருமகளுக்குனு எழுதி இருக்கு  ஒரு வேள அவங்க இறக்கரத்துக்கு முன்பே சக்திக்கு பெண் பார்த்திருப்பாரோ இந்த லட்டர அந்த பொண்ணுக் கொடுக்கரத்துக்கு முன்னாடியே அவங்க இற,,... இறந்துட்டாங்களா"என செல்வியைப் பார்த்தாள்.

இதை படிக்கலாமா வேண்டாவா என்ற குழப்பத்தில் இருந்தவள் சிறு தயக்கத்திற்கு பின் கடிதத்தை படிக்கத் தொடங்கினாள்.

இதய திருடா Where stories live. Discover now