37

10.1K 312 44
                                    

எவ்வளவு நேரம் அந்த சோபாவில் அமர்ந்திருப்பாள் என்று தெரியாது.

அந்த தனிமையில் கிடைத்த அமைதியில் பாரதி கூறியவற்றை தன் மனதில்  அசைப் போட்டுக் கொண்டிருந்தாள்.

தன் கன்னத்தில் ஈரம் படர்வதை தொட்டு உணர்ந்தவள்  காரணமின்றி ஏன் அழுகிறோம் என குழம்பினால்.

கண்ணீரைத் துடைத்துவிட்டு நிமிர்ந்தவளின் கண்ணில்....தன் அன்னையின் தோளில் கைப்போட்டபடி சிரித்துக் கொண்டிருக்கும் சக்தியின் உருவம் தென்பட அந்த மாயப் புன்னகையில் சிக்குண்டவள் போல் அந்தப் போட்டோவை நோக்கி நெருங்கினாள்.

சக்தியின் பிம்பத்தை வருடி
கண்களை மூடியவளின் மனதில்

அறியாமல் செய்த தவறுக்கு பெண் என்றும் பார்க்காமல் தன் முன் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட சக்தி...

தன்னை கொச்சைச் சொற்களால் கலங்கப்படுத்தியவர் முன் அந்த கலங்கத்தைத் துடைக்க தன் கழுத்தில் தாளி கட்டிய சக்தி....

தன்னைக் காணவில்லை என்றவுடன் பதறியபடி தேடிய சக்தி..,.

ஒவ்வொன்றையும் மறுக்கும் போதும் தன்னைக் கட்டாயப்படுத்தாமல் பொறுமைக் காத்த சக்தி...

தாயின் நினைவில் தன் முன் குழந்தைப் போல் அழுத சக்தி...

அன்று உடல்நிலை சரியில்லை என்றவுடன் பதறிப் போய் கலங்கிய சக்தி..,

அன்று மருத்துவமனையில் தன் தந்தையின் சிகிச்சையின் போது ஒரு தோழன் போல்ஆதரவாக இருந்த சக்தி,...

அன்னை இல்லத்தில் குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிய சக்தி,...

இதுவரை கணவன் என்ற உரிமையில் தன்னை நெருங்காமல் இருந்த  கண்ணியமான  சக்தி,...

என
தன் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்தது முதல் இன்று வரையிலான சக்தி வந்துப் போனான்.

இதுவரை சக்தியின் கண்ணில் தனக்காகப் பூத்த அன்பு அக்கறை ,பரிதவிப்பு ,பயம் கோபம் ,தோழமை என இவை அனைத்தையும் வேறு ஒருவளுக்கு விட்டுத் தருவதை நினைத்துப் பார்த்தவளின் தலை மறுப்பாக தலையசைக்க....

இதய திருடா Where stories live. Discover now