ரகசியமாய் புன்னகையித்தால் 4❤️‍🔥

858 19 2
                                    

புன்னகை 4

யாழி கத்திய கத்தில் நன்றாக அவள் கழுத்தில் தலை வைத்து உறங்கிக்கொண்டிருந்த பரிதி பதறி அடித்து எழுந்து அமர்ந்தான்

எதுக்கு டி இப்படி கத்துற என்று யாழியை பார்த்தபடி சாவுகாசமாக சோம்பல் முறிக்க

யாழி வந்த கோபத்திற்கு அவன் கன்னத்தில் ஓங்கி அறையும் சமயம் சரியாக இதழினியும் உள்ளே நுழைந்தாள்

யாழி!!!! என்று அதட்டியபடி இனி உள்ளே நுழைய அக்காவை கண்டதும் யாழி எதுவும் சொல்லாமல் எழுந்து அறைக்குள் முடங்கிக்கொண்டாள்

பரிதி கன்னத்தை தேய்த்தபடி எழுந்து நின்றான்.சாரி டா ரொம்ப வலிக்குதா என்றாள் இனி அவன் கன்னத்தை ஆராய்ந்நதபடி. பரிதி அவள் அடித்ததை சட்டை செய்யாமல் ஆதி நீ ப்ரெஷ் ஆகிட்டு வா நா காபி போட்டு தர்றேன் என்க

ஏன் டா கன்னமே பழுக்குற அளவுக்கு அடி விழுந்திருக்கு எனக்கு காபி போட்டு தர்றேன்னு சொல்லிட்டு இருக்க என்று நண்பனுக்காக வருந்த..ப்ச் அது ஒரு சின்ன ஊடல் நாங்க பாத்துக்குறோம் என்று அவளுக்காக காபி எடுத்து வரச்செல்ல இனி அறையினுள் நுழைந்தாள்

யாழி பாத்ரூமில் இருக்க அவள் வரும்வரை அவளுக்காக காத்திருந்தாள் இனி. அவள் வெளியில் வந்ததும் நீ பண்ணுறது கொஞ்சம் கூட சரி இல்ல யாழி மா . எதுக்கு அவன அடுச்ச என்ன இருந்தாலும் என்று அவள் சொல்லி முடிக்கும் முன் போதும் கா நீ இன்னமும் நா அவன கல்யாணம் பண்ணிப்பன்னு நம்பிட்டு இருந்தன்னா அந்த எண்ணத்தை இப்போவே அழிச்சிடு

என்ன டி பெரிய பேச்செல்லாம் பேசிட்டு இருக்க என்று இனி அவளை அழைத்து அருகில் அமர வைத்து அவள் தலையை மென்மையாக வருட...முடியல கா நீ சொல்லுற மாதிரி இளாவுக்கும் அவங்க அப்பா அம்மா செஞ்சதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லன்னு நம்பி அவன கல்யாணம் பண்ணுறன்னே வெச்சுப்போம் அதுக்கு அப்புறம் அவன் அம்மா அப்பாவை பாக்குற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நம்ம அம்மா அப்பா நியாபகம் தான் வரும், யாருமே இல்லாம பொறந்து வளர்ந்த ஊரை விட்டு இப்படி அநாதையா இங்க வந்து இருக்கோம்னா இது எல்லாத்துக்கும் யாரு காரணம் என்று கண்கள் கலங்க கூற

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now