ரகசியமாய் புன்னகையித்தால் 45❤️‍🔥

533 16 2
                                    

புன்னகை 45

சூர்யாவிற்கு சில டெஸ்டுகளை எடுத்த மருத்துவர்கள் அதன் ரிசல்ட் வந்ததும் ஜீவா, மீனாட்சி மற்றும் சர்வாவை அழைத்தனர்.

மூவரும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர்.

மருத்துவர் - ரிபோட்ஸ்லாம் க்ளியரா இருக்கு ஒன்னும் பயப்பட வேண்டாம். பிசிகலா எந்த பிராப்ளமும் இல்ல, மெண்டலி ரொம்ப கஷ்டப் படுறாரோன்னு தோணுது.. நீங்க சை்கார்டிஸ்ட்ட பாக்குறது பெட்டர். சென்னையில இவங்க தான் பெஸ்ட் சைகேட்ரிஸ்ட் இவங்க கிட்ட சிட்டிங் போங்க.. கண்டிப்பா உங்க தம்பிக்கு நியாபகங்கள் திரும்ப வர100% சான்ஸ் இருக்கு என்று நம்பிக்கை கொடுக்க.. மூவருக்கும் அப்போது தான் மனம் நிம்மதியாக இருந்தது. ஒரு ரெண்டு நாள் பெட் ரெஸ்ட் எடுக்கட்டும் உடம்புல இருக்க காயம் எல்லாம் ஆருனதுக்கு அப்புறம் நீங்க அவரை கூட்டிட்டு போகலாம் என்று கூறினார்.

மீனாட்சியும் சர்வாவும் மருத்துவமனையிலே சூர்யாவுடன் இருப்பதாக சொல்லிவிட "என்ன வேணும்னாலும் போன் பண்ணுங்க" என்றுவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டான் ஜீவா

மீனாட்சி சூர்யாவின் அருகிலே அமர்ந்து இருந்தாள். சூர்யா உறங்கவில்லை கண் மூடவும் இல்லை சுவற்றை வெறித்து இருந்தான்.

மீனாட்சி ஆசையாக அவன் தலையை வருட அவன் எதிர்க்கவில்லை. இனியின் அணைப்பிற்கு பின்னர் மனம் எதோ ஒரு உந்துதலில் கூறியது இது தான் உன் வாழ்க்கை இது தான் உனது குடும்பம் என்று. ஆனால் இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கை விடுத்து மனம் சொல்வதை சட்டென்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவனால்.

மீனாட்சி - எதாவது சாப்பிடுறியா டா என்று கேட்க சூர்யா பதில் பேசவில்லை.

மீனாட்சி சர்வாவிடம் "சர்வா அவனுக்கு மாதுளை ஜுஸ் ரொம்ப பிடிக்கும் வாங்கிட்டு வரீங்களா" என்று கேட்க சர்வாவும் வாங்கி வர சென்றுவிட்டான்.

மீனாட்சி - ஒரே ஒரு முறை அக்காவை மீனு கா ன்னு கூப்பிடு டா என்று ஆசையாக கேட்க அப்பொழுதும் சூர்யா எதுவும் பேசவில்லை

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now