ரகசியமாய் புன்னகையித்தால் 16❤️‍🔥

490 12 1
                                    

புன்னகை 16

மீனாட்சியின் தம்பி சூர்யா பள்ளி முடித்துவிட்டு தன் மிதிவண்டியில் வீடு திரும்பியவன் எப்போதும் போல் அவன் செடிகளுடன் அன்றைய நிகழ்வுகளை பகிர்ந்துக்கொண்டிருக்க வீட்டில் யாரோ நுழையவும் தன் அக்கா தான் என்று ஆசையாய் திரும்பி பார்க்க இதழினி அவனை பார்த்து புன்னகையுடன் நின்றிருந்தான்.

இதழினியை பலமுறை ஊரில் பார்த்திருக்கிறான் ஆனால் பேசியதில்லை, இங்கு எதற்கு வந்திருக்கிறார் என்று யோசித்தபடி "வாங்க கா" என்றான் அவன் கன்னக்குழி தெரிய அழகாக புன்னகையித்து

இதழினி - என்ன உன் பிரெண்ட்ஸோட கதை பேசி முடிச்சாச்சா என்று அவளும் அவன் அருகில் அமர்ந்து செடிகளை ரசித்தாள்

சூர்யா - உங்களுக்கு எப்படி தெரியும்

இதழினி - எனக்கு தெரியுமே, இந்த செடி பேரு மஞ்சுன்னு கூட தெரியும் என்று கூற சூர்யா ஆச்சர்யமாக பார்த்தான்

இதழினி - எப்படி தெரியும்னு யோசிக்குறியா, இதோ இப்போ இந்த செடிங்க தான் சொல்லுச்சு. நம்ம பேசுறது அவங்களுக்கு புரியுற மாதிரி அவங்க பேசுறது எனக்கு புரியும் இப்போ நீ இவங்க கிட்ட என்ன சொல்லிட்டு இருந்தன்னு நீ சொல்லாமலே இவங்க கிட்ட கேட்டு சொல்லவா என்று கூற சூர்யா அவளை அதிசயமாக பார்த்து தலை அசைத்தான்

"ஹ்ம்ம் உனக்கு இன்னைக்கு ஸ்கூல்ல மேத்ஸ் டெஸ்ட் நடந்திருக்கு நல்ல மார்க் வாங்கியிருக்க ஆனா சயின்ஸ்ல ரொம்ப கம்மியா வாங்கியிருக்க போல " என்று செடிகளிடம் காது வைத்து கேட்டுக்கொண்டு இவனிடம் கூறிக்கொண்டிருக்க சூர்யாவிற்கு ஆச்சர்யம். அவளுக்கு உண்மையிலே செடிகள் பேசுவது கேட்கிறது என்றே நம்பிவிட்டான்

சூர்யா - அக்கா எப்படி கா, நிஜமாவே இவங்க எல்லாரும் பேசுவாங்களா என்று ஆர்வமாய் கேட்க

அவனை இதற்குமேலும் ஏமாற்ற மனமில்லாதவள் "டேய் சும்மா சொன்னேன் டா, நா உள்ள வரும்போது நீ இதெல்லாம் இவங்ககிட்ட சொல்லிக்கிட்டு இருந்த அதை வெச்சு அப்படியே சொன்னேன்" என்று அவன் தலை முடியை களைத்து விட சூர்யா அவளை செல்லமாய் முறைத்தான்

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Dove le storie prendono vita. Scoprilo ora