ரகசியமாய் புன்னகையித்தால் 42❤️‍🔥

461 17 2
                                    


புன்னகை 42



மீனாட்சி மற்றும் சர்வாவின் வார்த்தைகள் ஏனோ இனியின் மனதிற்கு இதமாய் இருந்தது. சர்வாவிடம் பேசிய சிறிது நேரத்திலேயே புரிந்தது அவன் குணம், மீனாட்சிக்கு அமைந்த வாழ்க்கை நினைத்து மகிழ்ந்த இனி, அடுத்த கணமே மாறன் அடுத்த வாரமே நமக்கு கல்யாணம் என்று கூறியது நினைவிற்கு வந்தது. பேசாம மாமா கிட்ட உண்மைய சொல்லிருவோமா??? என்று பலவாறு யோசனைகள் மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்க

சர்வா - இனி நாங்க ஜீவா சாரை பாக்க வரலாமா என்று கேட்க இனியால் மறுக்க முடியவில்லை இருவரையும் அழைத்துக்கொண்டு அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தாள்.

பரிதி மீனாட்சியை கண்டு முதலில் பயந்தான் எங்கே இனி நினைத்துக்கொண்டு இருப்பது போல் தன் அண்ணனை மீனாட்சிக்கு திருமணம் செய்து வைத்துவிடுவாளோ என்று. அதிர்ச்சியை முகத்தில் காட்டது அவளை நலம் விசாரித்தவன் அருகில் நின்றிருந்தவனை பார்க்க, மீனாட்சி சர்வாவை அவள் கணவன் என்று அறிமுகம் செய்ய பரிதியின் முகத்தில் அதை கேட்டவுடன் தான் உண்மையான மகிழ்ச்சி தோன்றியது.

இனியை பார்த்தவன் புருவம் உயர்த்தி இப்போ என்ன பண்ண போற என்றான் அவள் நண்பன். இனி எதுவும் பேசாமல் பார்வையை திருப்பிக்கொண்டாள்.

மீனு கா என்று யாழி ஓடிவந்து அவளை அணைத்துக் கொண்டாள். பின்னர் யாழியும் மீனாட்சியும் பேசிக்கொண்டிருக்க

சர்வா - ஜீவா சார் வீட்ல இல்லையா

பரிதி - அண்ணா ஊருக்கு போயிருக்காரு

இனி - ஊருக்கா??? என்ன திடீர்னு என்றாள் பதட்டத்துடன்

பரிதி - வெற்றி மாமாவை பாக்க போயிருக்காரு

இனியால் ஜீவா வெற்றியை தான் பார்க்க போயிருக்கிறான் என்பதை நம்ப முடியவில்லை. காலையில் மாறன் கூறியது இப்போது ஜீவா ஊருக்கு சென்றிருப்பது என இரண்டையும் நினைத்து பயந்தாள்.

மீனாட்சி - அப்போ நாங்க இன்னொரு நாள் வந்து ஜீவா சாரை பாத்துக்குறோம். பத்திரமா இருங்க இனி எந்த உதவி வேணும்னாலும் எங்க கிட்ட கேளுங்க என்று மீனாட்சியுடன் சர்வாவும் அவளுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு கிளம்பினர்.

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now