ரகசியமாய் புன்னகையித்தால் 27❤️‍🔥

434 14 1
                                    

புன்னகை 27

தன்மீது ஆட்சி புரிந்துக்கொண்டிருப்பவனை தடுக்க மனமில்லாமல் உணர்ச்சி வசத்தில் சிக்கி தவித்துக்கொண்டிருந்தாள் இனி

அவள் இடையில் இதழ் பதித்தவனின் மூலையில் மணியடிக்க சட்டென்று தன்னை மீட்டெடுத்தவன் இனியின் முகத்தை நிமிர்ந்து பார்க்க கண்களை மூடி தன் உணர்ச்சிகளை வெளிக்காட்ட தெரியாமல் அவள் தவிப்பது புரிந்தது . அழுத்தமாக அவள் இதழிலில் இதழ் பதித்தவன் அவள் இரு கண்களிலும் காற்றுக்கும் நோகாமல் இதழ் பத்தித்துவிட்டு "கண்ணை திற செல்லம்மா" என்றான் மெல்லிய குரலில்

மெல்ல கண்விழித்தவள் ஜீவாவை பார்க்க அவன் உருவி விட்டெறிந்திருந்த சேலையை எடுத்து வந்தவன் அவளுக்கு அணிவித்து விட அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி இருந்தாள் இனி

ஜீவா "ஏன் டி நான் தான் எல்லை மீறி போறேன்னு தெரியுது இல்ல என்னை கண்ட்ரோல் பண்ண வேண்டியது தான" என்றான் சிறு வெட்கம் கலந்த புன்னகையுடன்

இனி - அதென்ன மாமா எப்பவுமே ஆம்பளைங்களுக்கு தான் எல்லை மீறி போக ஆசை இருக்குமா பொண்ணுங்களுக்கும் இருக்கும் அதுவும் இல்லாம எப்பவுமே நான் தான் உன்ன கண்ட்ரொல் பண்ணனுமா நீயே கண்ட்ரோலா இருக்க மாட்டியா??

ஜீவா - இப்படியே பேசிட்டு இரு கல்யாணத்துக்கு முன்னாடி வளைகாப்பு நடத்துறேன்

இனி - நடத்து நடத்து எனக்கு ஒகே தான் என்க ஜீவா மீண்டும் வம்பிழுக்க என வெகு நாட்களுக்கு பிறகு இருவரும் பழையபடி பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்

கோவிலில் ஜீவாவும் மாறனும் சண்டையிட்ட விஷயம் தெரிந்து பாண்டியன்,வெற்றி, பரிதி மூவரும் ஜீவாவை பார்க்க பதறியபடி வந்தனர்.

பாண்டியன் - ஜீவா என்ன பா ஆச்சு நம்ம பூக்கார அம்மா வந்து கோவில்ல நீ யார்கூடையோ சண்டை போட்டுட்டு இருந்ததா சொன்னாங்க, என்ன பா என்க இனி ஜீவாவை புரியாமல் பார்த்தாள் ஏனென்றால் அவளும் காலையில் கோவிலுக்கு சென்றுவிட்டு தானே வந்தாள் தன் மாமா சண்டையிட்டு அடிப்பட்டு வந்திருப்பதை நம்பமுடியாமல் பார்த்தாள். யாரோ ஒரு பொருக்கி வழிகிறான் என்று மாறனை பற்றியும் ஜீவாவிடம் கூறவில்லை வீணாக எதற்கு வம்பென்று

ரகசியமாய் புன்னகையித்தால் ❤️‍🔥Where stories live. Discover now